குரங்குடன் செல்ஃபி எடுத்த நடிகை சமந்தா!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0
121

குரங்குடன் செல்ஃபி எடுத்த நடிகை சமந்தா!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

சமந்தா தற்பொழுது குஷி என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த படத்தில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ் ,தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் வெளியாக தயாராகி கொண்டு இருக்கின்றது.

சமந்தா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,இந்தி அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இவர் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி  நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்த பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் பாதிக்க பட்டிருத்த அந்த ஓராண்டு கால இடைவெளியில் எந்த ஒரு புதிய படத்திலும் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருந்தார்.அதன் பிறகு சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து நடிக்க தொடங்கினார்.

உடல்நிலை முழுமையாக குணமடையாத காரணத்தால் தான் நடிப்பதாக ஒப்பந்தம் செய்து முன்பணம் வாங்கிய நிலையில் தற்பொழுது  அனைத்தையும் திருப்பி கொடுத்துள்ளார்.

மேலும் சில நாட்களாகவே கோவில்களுக்கு செல்வதும் இயற்கையுடன் ஒன்றி இருப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது சமந்தா அவரகள் ஈஷா யோகா கோவிலில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி கொண்டு வருகின்றது.

மேலும் ஓய்வு நிலையில் உள்ள சமந்தா தொடர் சிகிச்சைக்கா அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு செல்ல உள்ளார். இதனால் ஓராண்டு காலம் சினிமாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் சமந்தா தன் தோழி ஒருவருடன் இந்தோனேசியாவில் உள்ளார். தற்பொழுது சமந்தா இயற்கை சூழலுடன் ஒன்றிருக்கும் நிலையில் உள்ளார். மேலும் சமந்தா தன் தோழியுடன் குரங்கு ஒன்றை கையில் வைத்திருப்பது போன்று புகைபடத்தை வெளியிட்டு உள்ளார்.

Previous articleஇதெல்லாம் ஒரு முதலமைச்சருக்கு அழகா!! பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி!!
Next articleஇந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை நட்சத்திரம் யார் என்று தெரிகின்றதா?? இவர் தான் உங்கள் கனவு கன்னி!!