“மறக்க முடியாது” மறைந்த VJ சித்ரா பற்றி நெருங்கிய தோழி ஷாலு ஷம்மு உருக்கம்!!

0
174

“மறக்க முடியாது” மறைந்த VJ சித்ரா பற்றி நெருங்கிய தோழி ஷாலு ஷம்மு உருக்கம்!!

சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தெகிடி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிகை ஷாலு ஷம்மு நடித்து வருகிறார்.

இவர் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். அப்போது ரசிகர்களிடம் கேள்வி எழுப்புவது வழக்கம். அந்த வகையில், தற்போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அளித்த பதில்கள் தான் இணையத்தை கலக்கி வருகின்றது.

ரசிகர் ஒருவர், ‘திரைத்துறை பெண்களுக்கு சவாலாக இருக்குமா?’ என்றும், ‘சில விஷயங்களை பெண் கலைஞர்கள் அனுசரித்து போவது உண்மைதானா.?’ என்றும் கேட்க, “இவை அனைத்தும் சூழ்நிலையை பொருத்தது. ஒருவர் எடுக்கும் முடிவை இன்னொருவர் எடுக்க மாட்டார்கள். அவர்களது முடிவில் இன்னொருவர் தலையிடவும் முடியாது. எல்லோருக்கும் அப்படி நடப்பது இல்லை.” என்று ஷாலு ஷம்மு தெரிவித்தார்.

மேலும், ஒரு சிலர் அநாகரிகமாக உடலமைப்பு குறித்து கேள்வி எழுப்ப அதற்கும் பதிலடி கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “இப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் எதற்காக பதில் அளிக்கிறீர்கள்? கண்டுகொள்ளாமல் கடந்து போய்விடுங்கள்.” என்று அறிவுரை வழங்குகின்றனர்.

மேலும் ஒரு ரசிகர், ‘உங்களுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கிறீர்களா.?’ என்று கேட்க அதற்கு ஷாலு சம்மு வெட்கப்பட்டு ஆமாம் என்று பதில் அளித்துள்ளார். கடந்த ஆண்டு உயிரிழந்த VJ சித்ராவின் நெருங்கிய தோழி தான் ஷாலு ஷம்மு.

அவரிடம் சித்ரா குறித்து சிலர் கேள்வி எழுப்பியபோது, “சித்ராவை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை. டைம் மிஷின் ஒன்று கிடைத்தால் நான் கடந்த டிசம்பர் மாதத்திற்கு சென்று எனது தந்தையை மரணத்தில் இருந்து மீட்டு இருப்பேன்.” என்று உருக்கமாக பதிலளித்துள்ளார்

Previous articleமீரா மிதுன் அவங்களோடதை சேல் பண்றாங்களாம்! வேணும்னா வாங்கிக்கறதாம்!
Next articleபெற்ற மகளை வெட்டியே கொன்ற தந்தை! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்!