பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் நடிகை ஷகீலா!!! ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!!!
பிரபல மலையாள நடிகை ஷகீலா அவர்கள் தெலுங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது 16 வது சீசன் முடிந்துள்ளது. ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடா, மலைஆளம் ஆகிய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இதில் தமிழில் இதுவரை 6 பிக்பாஸ் சீசன்கள் முடிந்துள்ள நிலையில் ஏழாவது சீசன் தொடங்கவுள்ளது. அதே போல கன்னட மொழியில் இதுவரை 9 பிக்பாஸ் சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. மலையாளத்தில் இதுவரை 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. தெலுங்கில் தற்பொழுது 7வது சீசன் தொடங்கியுள்ளது.
தெலுங்கில் தொடங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனை நடிகர் நாகர்ஜூனா அவர்கள் தொகுத்து வழங்குகிறார். இதையடுத்து தெலுங்கில் ஏழாவது பிக்பாஸ் சீசன் தொடங்கியது. வழக்கம் போல நடிகர் நாகர்ஜூனா அவர்கள் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பியுள்ளார்.
இதில் பெரும் அதிர்ச்சி தமிழ் ரசிகர்களுக்கு பிக்பாஸ் சீசன் 7 தெலுங்கு நிகழ்ச்சி அளித்துள்ளது. அதாவது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகை ஷகீலா அவர்கள் தற்பொழுது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
நடிகை ஷகீலா அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். அதன் பிறகு தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடிகை ஷகீலா அவர்கள் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தமிழ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.