ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள்! வாயைப் பிளந்த ரசிகர்கள்!

0
87
Actress shilpa manjunath sizzling photos gone viral
Actress shilpa manjunath sizzling photos gone viral

ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள்! வாயைப் பிளந்த ரசிகர்கள்!

நடிகை ஷில்பா மஞ்சுநாத் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவர் 2016ம் ஆண்டு கன்னடத் திரைப்படம் ஒன்றில் நடிகையாக அறிமுகம் ஆனார்.பின்பு மலையாள மொழியிலும் நடிக்கத் தொடங்கினார்.இவர் தமிழில் காளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருப்பார்.கிருத்திகா உதயநிதி இந்த படத்தை இயக்கியிருப்பார்.விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.மேலும் இவர் 2019ம் ஆண்டு வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கினார்.ஹரிஷ் கல்யான் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தார்.மாதவ் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.

இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.மேலும் நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாபாத்திரமும் சிறப்பாக அமைந்தது.இதில் அவர் கல்லூரி மாணவியாக தாரா என்ற மாடர்ன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக இந்த படம் இருக்கும்.இந்த படத்தில் எல்லா பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.குறிப்பாக கண்ணம்மா உன்ன என்ற பாடல் மிகப் பெரிய ஹிட் ஆனது.

அதனையடுத்து தற்போது தமிழில் தேவதாஸ் பிரதர்ஸ் என்ற படத்திலும் இவர் நடித்து வருகிறார்.மேலும் தமிழில் இவர் வெப் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.நடிகர் நடராஜ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.இதனிடையே தற்போது அவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிந்து வருகிறார்.இவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
Parthipan K