அவனுக்கும் எனக்கும் லவ்வா?!. பிரேம்ஜி ஒரு வயசான குழந்தை!.. சோனா ஒப்பன் டாக்!…

0
44
premji

இசைஞானி இளையராஜவின் தம்பி கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி. அதாவது, இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பி இவர். மிகவும் ஜாலியான பேர்வழி. வெங்கட்பிரபு சென்னை 28 படத்தை இயக்கியபோது அந்த படத்தில் நடித்தார். அதன்பின் வெங்கட்பிரபு இயக்கிய சாரோஜா, கோவா, சென்னை 28 பாகம் 2, பிரியாணி, மங்காத்தா போன்ற படங்களிலும் நடித்தார்.

இவர் ரஜினி மற்றும் சிம்புவின் ரசிகர். எனவே, அவர்களை போல ஸ்டைல் செய்து கொண்டே நடிப்பார். இவர் பேசிய ‘எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ண மாட்டோமா மற்றும் என்ன கொடுமை சார் இது’ போன்ற வசனங்கள் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம், மாங்கா உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால், எடுபடவில்லை.

எனவே, அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் மட்டும் தலை காட்டி வருகிறார். விஜய் நடித்திருந்த கோடி படத்திலும் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார். பல வருடங்களாகவே முரட்டு சிங்கிளாக வலம் வந்த பிரேம்ஜி திடீரென திருமணம் செய்து கொள்வதாகவும் அறிவித்தார். சேலத்தை சேர்ந்த இந்து என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்பு பிரேம்ஜி எப்போதும் நண்பர்களுடன் நேரம் செலவழிப்பார். நண்பர் கூட்டத்துடன் நட்சத்திர விடுதிக்கு சென்று பார்ட்டி பண்ணும் பழக்கம் பிரேம்ஜிக்கு உண்டு. ஆனால், இப்போதெல்லாம் யாரும் அழைத்தால் கூட அவர் போவதில்லையாம். பொண்டாட்டி திட்டுவா. நான் வரல.. நான் வீட்டுக்கு போறேன் என சொல்லும் அளவுக்கு நல்ல பிள்ளையாக மாறிவிட்டார். இந்த நிலையில்தான் நடிகை சோனாவுடன் அவருக்கு காதல் என சில வருடங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

sona

இந்நிலையில்,, ஊடகம் ஒன்றில் பேசிய சோனா ‘நானும் பிரேம்ஜியும் லவ் பண்ணோம். தயாரிப்பாளர் சிவா நடுவுல வந்து பிரிச்சிட்டார்னு பேசினாங்க. அது எல்லாம் பொய். இத கேட்டு பிரேம்ஜி பயங்கராம சிரிச்சான். நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பரக்ள். அவ்வளவுதான். பிரேம்ஜி ஒரு வயசான குழந்தை’ என சொல்லியிருக்கிறார்.

Previous articleதயாநிதி மாறன் தேர்தல் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
Next articleஅனல் பறக்கும் அழகிரி வழக்கு: சட்டையை சுழற்றும் உயர்நீதிமன்றம் – அடுத்த குறி யாருக்கு?