நடிகை சோனா தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை வைத்து ஸ்மோக் என்ற வெப்சைட் இசை எடுத்துக் கொண்டிருந்த நிலையில் அந்த வெப் சீரிஸ் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் தன்னுடைய படத்தின் ஹார்ட் டிஸ்க் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் பெப்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து கதறிக் கொண்டிருக்கிறார்.
இது குறித்த நடிகை சோனா தெரிவித்த விளக்கம் பின்வருமாறு :-
வடபழனியில் இருக்கக்கூடிய பெப்சி அலுவலகத்தின் முன்பு தெரிகிறன அமர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய நடிகை சோனா வேறு வழியின்றி தான் நான் இங்கு அமர்ந்திருப்பதாகவும் ஒரு வருடத்திற்கு முன்பு தன்னுடைய படத்தை பாதியில் விட்டு ஏமாற்றி பலர் சென்று விட்டனர் என்றும் எனினும் அதனை தானே முடிக்கலாம் என முயன்ற பொழுது அதை தன்னால் முடிக்க முடியவில்லை என தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்த பெப்சி அலுவலகத்திற்கு வந்த புகார் அளித்த பொழுது தன்னை அங்கும் இங்குமாக அலைய வைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக தன்னை ஏமாற்றிய மேனேஜர் மீது பெப்சி தரப்பில் இருந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இரவு நேரங்களில் தன் வீட்டிற்கு பல டெக்னீசியன்கள் வந்து கதவை தட்டுகிறார்கள் தனக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல தெரிவித்து இது போன்ற காரணங்களால் தான் நான் இப்பொழுது பெப்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்திருக்கிறேன் என சுட்டிக்காட்டி உள்ளார்.
தன்னை ஏமாற்றிய மேனேஜர் தான் அனைத்து டெக்னீசியன்களுக்கும் என்னுடைய வீட்டு அட்ரஸை கொடுத்து விட்டார் என்றும் அவர்கள் என்னுடைய வீடு தேடி வந்து பணத்தை கொடுக்க வேண்டும் என மிரட்டி செல்வதாகவும் இரவு நேரங்களில் இது போல நிகழ்வதால் தனக்கு பாதுகாப்பானதாக இல்லாத சூழல் உருவாகி இருக்கக்கூடிய காரணத்தால் இன்று என்ன முடிவை எடுத்து பெப்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து உள்ளேன் என்றும் தெரிவித்ததோடு தன்னை ஏமாற்றிய மேனேஜர் ஷங்கரை நான் சந்திக்க வேண்டும் என்றும் அவர் உடனடியாக இங்கு வந்து என்னுடைய படத்தின் ஹார்ட் டிஸ்க் மற்றும் என் பணம் முழுவதையும் மீண்டும் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.