நடிகை ஸ்ரீதேவி அவர்களின் 60வது பிறந்தநாள்… புதிய டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்!!

Photo of author

By Sakthi

 

நடிகை ஸ்ரீதேவி அவர்களின் 60வது பிறந்தநாள்… புதிய டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்…

 

மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களை கௌரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் புதிய டூடுளை வெளியிட்டுள்ளது. மும்பையை சேர்ந்த பூமிகா முகர்ஜி என்பவர் இந்த டூடுலை வடிவமைத்துள்ளார்.

 

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நடிகை ஸ்ரீதேவி அவர்கள் 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி பிறந்தார். சிறிய வயது முதலே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதையடுத்து நடிகை ஸ்ரீதேவி அவர்கள் 4 வயதில் கந்தன் கருணை திரைப்படத்தில் குழந்தை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் நடிகர் எம்.ஜி.ஆர் உள்பட பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

 

பல மொழிகள் பேசும் நடிகை ஸ்ரீதேவி அவர்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி நடித்த பதினாறு வயதினிலே திரைப்படம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. இயக்குநர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1976ம் உண்டு வெளியான மூன்று முடிச்சு திரைப்படத்தில் சிறப்பாக நடித்த நடிகை ஸ்ரீதேவி அவர்களுக்கு முதல் தேசிய விருது கிடைத்தது.

 

300 படங்கள் நடித்திருந்த நடிகை ஸ்ரீதேவி அவர்கள் 2000ம்வது ஆண்டில் நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் 12 வருடங்கள் கழிந்து இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துவந்த நடிகை ஸ்ரீதேவி நடிகர் விஜய் நடித்த புலி திரைப்படத்திலும் நடித்திருந்தார். நடிகூ ஸ்ரீதேவி அவர்களுக்கு 2017ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

 

ஆணாதிக்கம் நிறைந்த இந்திய திரையுலகில் நடிகைகள் முதன்மை பாத்திரத்தை ஏற்று நடித்தாலும் திரைப்படம் வெற்றியடையும் என்ற வரையறையை நடிகை ஸ்ரீதேவி அவர்கள் வகுத்து கொடுத்தார். நடிகை ஸ்ரீதேவி அவர்கள் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி உயிரிழந்தார்.