சுஜாதா 15 வயது முதல் நடித்துக் கொண்டிருக்கிறார். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தில் தான் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமாக சுஜாதா.
இவருக்கு நடிப்பதில் மிகவும் ஆர்வம் கம்மி அதனால் இங்கு இருந்து எப்படி ஓடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம் சுஜாதா
ஆனால் படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் மிகவும் வற்புறுத்தல் செய்ததினால் தான் இருப்பதாக தெரிவித்துள்ளார். படத்தின் போது சுஜாதா சிவக்குமாரிடம் சொல்லிக் கொண்டிருந்தாராம். இந்த படம் ஓடாது.இது இந்த படத்தோடு நான் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.
என்ன படம் ? படத்தின் பெயர் என்ன? சம்பளம் எவ்வளவு? பேங்க் அக்கவுண்ட் என்ன? என என்பது பற்றி எந்த விஷயமும் அவருக்கு தெரியாது. அவர்கள்தான் இதை ஹேண்டில் செய்து வந்தார்களாம்.
ஆனால் படமோ மாபெரும் வெற்றி பெற்றது ஊர் ஊராக பட குழுவினர் சென்று தங்களது வெற்றியை கொண்டாடி வந்தனர்.
சுஜாதாவைப் பார்க்கும் போதே ரொம்ப மென்மையாகவும், அழகு பதுமையாகவும் இருப்பார்கள். அவர்களுடையே கண், மான் கண்போல அவ்வளவு அழகாக இருக்கும். சுஜாதா சினிமாவில் நடித்த வரை அவர்கள் மீது ஒரு கெட்ட பெயரும் கடைசி வரைக்கும் வந்தது இல்லை. அவருடைய நடிப்பு மிகவும் கண்ணியமாக இருக்கும்.
பின் சினிமாவை வெறுத்த சுஜாதா ,ஜெயகர் என்பவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை வாழ தொடங்கினார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்கலாம் என்று அவரது கணவர் அனுமதி கொடுத்தாராம். ஆனால் அதன் பின் இப்படி நடி, அப்படி நடி என்று பல கண்டிஷன்களை போட்டு சுஜாதாவை பல வகையிலும் கொடுமைப்படுத்தி உள்ளார்.
ஒருமுறை குட்டி பத்மினி ஒரு பெட்டியில் “சுஜாதாவின் கணவர் ஜெயகர் ஆதிக்க மனம் கொண்டவர், கர்வம், தலைக்கனம் பிடித்தவர் போல நடந்து கொள்வார் அவரை எப்படி சுஜாதா காதலித்தார்கள் என்பது தான் இதுவரை புரியாத புதிர். சுஜாதா தனது கணவருடன் எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் ஒரு வீட்டின் கீழ் பகுதியில் ஊறுகாய் கம்பேனி நடத்திக்கொண்டு மேல் வீட்டில் குடியிருந்தார்கள்.”
ஒரு நாள் சுஜாதாவை அவரது கணவர் பெல்டால் அடிக்கும் சத்தமும், வலி பொறுக்க முடியாமல் அவர் அழும் சத்தமும்,எங்களுக்கு கேட்டது. உடனே ஓடிப் போய் நானும் அம்மாவும் தடுத்தோம். அப்போதும் சுஜாதா பொருமையாக எதையும் பேசாமல் அழுக்கொண்டே இருந்தார்”
அதற்குப் பின் அவர்கள் அந்த வீட்டை காலி செய்து விட்டார்கள். எங்கு போனார்கள்? என்ன ஆனார்கள்? என்று யாருக்கும் தெரியவில்லை. சுஜாதா இறந்த செய்தி கூட அவ்வளவு ஆக வெளிவரவில்லை. தெரிந்த ஓர் இரண்டு நடிகர்கள் மட்டுமே சென்று வந்தனர்,என்று குட்டி பத்மினி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.