ஒரே வருடத்தில் கணவரை விவாகரத்து செய்யும் தமிழ் நடிகை

Photo of author

By CineDesk

ஒரே வருடத்தில் கணவரை விவாகரத்து செய்யும் தமிழ் நடிகை

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது பெற்ற நடிகை ஸ்வேதாபாசு, தமிழில் உதயா, ராரா, சந்தமாமா போன்ற படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு கன்னடம் உள்பட பல மொழிகளில் நடித்த இவர் கடந்த ஆண்டு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஸ்வேதா பாசுவுக்கு பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் மிட்டலுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் முடிந்து ஓராண்டு திருமண நாள் நாளை மறுநாள் கொண்டாட இருக்கும் நிலையில் இன்று அவர் திடீரென தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

ஒரே வருடத்தில் நடிகை ஒருவர் தனது கணவரை பிரிந்து விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தனது விவாகரத்து முடிவு குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: “கணவர் ரோகித்தை நான் பிரிந்து விட்டேன். பல மாதங்களாக யோசனை செய்த பிறகே இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம். பிரிய வேண்டும் என்ற முடிவை சேர்ந்தே எடுத்தோம். புத்தகத்தின் எல்லா பக்கங்களையும் படிக்க முடியவில்லை என்பதற்காக புத்தகம் மோசமாக இருக்கிறது என்று பொருள் அல்ல. ரோகித் எப்போதுமே என்னை ஊக்கப்படுத்தி வந்தார். அதற்காக அவருக்கு நன்றி. அவரை பற்றிய மறக்க முடியாத நினைவுகளும் எனக்குள் இருக்கும்.” இவ்வாறு ஸ்வேதா பாசு கூறியுள்ளார்.

திருமணம் நடந்து 12 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் பல மாதங்களாக பிரிவது குறித்து யோசனை செய்தேன் என்று ஸ்வேதாபாசு கூறியிருப்பது திருமணம் ஆனதில் இருந்தே இருவரும் கருத்து வேறுபாட்டுடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.