தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா!!

Photo of author

By Gayathri

சமீப காலமாகவே சினிமா துறையில் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருவதாகவும் இதற்கு முன்னால் நடந்தது என்றும் பலரும் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகை தமன்னா அவர்கள் கேரவனில் தனக்கு நடந்த நிகழ்வு குறித்து வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமா துறையில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா அவர். சமீபத்திய பிராட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா அவர்கள் தனக்கு நடந்த வன்கொடுமை குறித்து தெரிவித்திருக்கிறார்.

நடிகை தமன்னா அவர்கள் பேசியிருப்பதாவது :-

தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நிகழ்ந்து விட்டதாகவும் அதில் தன்னால் மறக்க முடியாத விஷயம் ஒன்று இருக்கிறது என்றால் தான் எதிர்பாராத நேரத்தில் கேரவனில் நடந்த ஒரு நிகழ்வு தான் என மனமுடைந்து தெரிவித்திருக்கிறார் நடிகை தமன்னா அவர்கள்.

தன்னுடைய கேரவனில் தனக்கு நடந்த அந்த சம்பவத்தால் அப்பொழுது தன்னுடைய கண்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியதாகவும் அந்த நேரத்தில் படப்பிடிப்பிற்காக தான் மேக்கப் செய்து ரெடியாக இருந்த காரணத்தால் தன்னால் மனம் விட்டு அழக்கூட முடியாத சூழ்நிலையில் தள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அந்த தருணத்தில் தனக்கு முன்புறமாக கண்ணாடி இருந்ததாகவும் கண்ணாடியில் தன்னை பார்த்து எந்த தருணத்திலும் நம் மனம் தளரக்கூடாது என தனக்கு தானே கூறிக் கொண்டதாகவும் நடிகை தமன்னா அவர்கள் தெரிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.