இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை திரிஷா!! வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்!!

Photo of author

By Rupa

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை திரிஷா!! வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்!!

ஜோடி படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து மௌனம் பேசியதே திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக மாறி இருக்கும் நடிகை திரிஷா அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.

40வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகை திரிஷா அவர்களுக்கு நடிகர்கள் பலரும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு நடிகை திரிஷா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

ரசிகர்களும் நடிகை திரிஷா அவர்களின் புகைப்படங்களை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வித்தியாசமான முறையில் நடிகை திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

நடிகை திரிஷா அவர்கள் தற்போது நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் லியோ படத்தில் நடிக்கிறார். இதையடுத்து லியோ படத்தின் தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் நடிகர் விஜய் அவர்களுடன் நடிகை திரிஷா இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பதிவிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், “உங்களுடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறோம்.

இந்த வருடம் இனிய வருடமாக இருக்க வேண்டும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் திரிஷா” என்று பதிவிட்டு “அலக்ஸா அர்ஜுனரு வில்லு பாடலில் இந்த வரிகளை போடு. அழகிய தாய் மொழி இவள். இவள் சிரிக்கையில் இரவுகள் பகல்” என்று பதிவிட்டுள்ளது.

மேலும் லியோ படம் நடிகை திரிஷாவிற்கு 67வது படம் என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று நடிகை திரிஷா அவர்களுக்கு செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பதிவிட்டுள்ளது.

லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். நடிகர் விஜய் அவர்களுக்கும் லியோ திரைப்படம் 67வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.