நடிகை த்ரிஷாவின் தாயார் கூறிய தகவல்! தளபதி 67 படத்தில் இவர்  இல்லையா?

0
319
Actress Trisha's mother said the information! Isn't he in Vijay 67?
Actress Trisha's mother said the information! Isn't he in Vijay 67?

நடிகை த்ரிஷாவின் தாயார் கூறிய தகவல்! தளபதி 67 படத்தில் இவர்  இல்லையா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது தளபதி 67 படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரித்து வருகின்றார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் இணைந்த கூட்டணியில் அமைந்த படம் மாஸ்டர் இந்த படம் வெற்றி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தளபதி 67 படத்தில் நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் பூனாம் பஜ்வா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் கடந்த 11ஆம் தேதி தான் விஜய் நடிப்பில் வாரிசு என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தில் 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் உடன் இணைந்து நடிகை த்ரிஷா நடிக்க உள்ளார் என அண்மையில் தகவல் வெளியானது.

மேலும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பிற்கு படக்குழு செல்லும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் காஷ்மீருக்கு படப்பிடிப்பிற்கு சென்ற சில தினங்களில் த்ரிஷா சென்னை திரும்பி விட்டார்.

இதனால் அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என பல செய்திகள் பரவி வருகிறது. இந்த செய்திகள் குறித்து நடிகை த்ரிஷாவின் தாயார் உஷா கூறுகையில் தற்போது சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் அனைத்தும் பொய் உண்மையில்லை. மற்ற நடிகர்களுடன் படப்பிடிப்பு நடக்கிறது என கூறியுள்ளார். இவர் கூறுவதை பார்த்தால் நடிகை த்ரிஷா இந்த படத்திலிருந்து விலகவில்லை என்பதும் தெரிய வருகிறது.

Previous articleஇதோ ரயில்களிலும் இந்த சேவை வந்துவிட்டது! வாட்ஸ் அப் எண் இருந்தால் போதும்!
Next articleஇனி இந்தத் துறைக்கும் டிஎன்பிசி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!