Actress Trisha: நடிகை திரிஷாவின் வளர்ப்பு நாய் கிருஸ்துமஸ் தினமான இன்று உயிரிழந்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா. 1999 ஆம் ஆண்டு திரையுலகில் துணைக் கதாபாத்திரமாக அறிமுகமானார். சாமி, கில்லி போன்ற படங்கள் இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக இருந்தது. தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இவர் தற்போது மிகவும் பிஸியாக இருக்கும் நடிகராக இருந்து வருகிறார். பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் . இவர் நடிக்கும் படங்கள், மற்றும் பிரயாணம் செய்யும் நாடுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்.
இருக்கும் சமூக வளையத்தில் லட்சக்கணக்கான போலவர்ஸ் இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் தினமான இன்று சமூக வலைத்தளத்தில் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட பதிவு ஒன்று ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது, “ஸோரோ” என்ற நாயை 2012 ஆம் ஆண்டு முதல் திரிஷா செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார்.
அவர் பதிவிட்டு இருக்கும் பதிவில் “என் மகன் ஜாரோ கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை இறந்து விட்டான். இதன்பின் என் வாழ்க்கை அர்த்தமற்றதாக ஆகிவிட்டது என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் நானும் என் குடும்பத்தாரும் உடைந்துபோய் உள்ளோம். மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப நேரம் ஆகும்” என .
மிகவும் உருக்கமாக பதிவிட்டு அந்த நாயை அடக்கம் செய்ய படத்தையும் பதிவிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.