நடிகை திரிஷா எடுத்த விபரீத முடிவு!!

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, தொடக்கத்தில் துணை நடிகை தனது பயணத்தை தொடங்கி தற்போது பிரபல முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து வருகிறார்.

இந்த லாக்டோன் காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர், தற்போது திடீரென்று பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்தையும் முற்றிலுமாக புறக்கணித்து வெளியேறியுள்ளார்.

இவருக்கு இன்ஸ்டாக்ராமில் 2.4 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றி வருகிறார்கள். ட்விட்டரில் 5.2 மில்லியன் ரசிகர்கர்கள் அவருக்கு இருக்கிறார்கள். இவருடைய ஒவ்வொரு போட்டோவுக்கும் குறைந்தது மூன்று லட்சம் லைக்குகலாவது குவிவது வழக்கம்.

இந்த நிலையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள அனைத்து போட்டோக்களையும் நீக்கியுள்ளார். தற்போது வெறும் இரண்டு போட்டோக்கள் மட்டுமே அவரது கணக்கில் உள்ளது.

அதற்கான காரணம் என்ன என்று தான் ரசிகர்களும் தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.மேலும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதா என்று கூட சில ரசிகர்கள் கேள்வி கேட்க துவங்கியிருக்கிறார்கள். 

இதற்கு பதிலளித்த த்ரிஷா தன்னுடைய கணக்கை யாரும் ஹேக் செய்யவில்லை என்று விளக்கம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த லாக்டோன் காலத்தில் நான் சமூக வலைதளத்தை விட்டு கொஞ்சம் விலகி இருக்க முடிவை எடுத்ததாகவும் ரசிகர்களிடையே அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளார்.