தமிழ்நாடு மறந்து போன தங்க தாரகை! அன்றைய லேடிஸ் சூப்பர் ஸ்டார்! வைஜெயந்தி மாலா!

0
237
#image_title

அழகே மிகவும் பொறாமைப்படும் என்று சொன்னால் இவர்களைப் பார்த்தால் அது மிகையாகாது. அவ்வளவு அழகாக கண்கள், அந்த கன்னங்கள், சிரிக்கும்போது கன்னங்கள் பெரிதாகும் பொழுது அவ்வளவு அழகாக இருக்கும் அவர்களை பார்க்க.

என்னதான் தமிழ்நாட்டில் பிறந்து இருந்தாலும் தமிழிலிருந்து அவரது நடிப்பை பாராட்டி ஹிந்தியில் போன முதல் நடிகை என்றே கூறலாம்.

 

அன்றைய இளைஞர்களின் ஒரு கனவு கன்னியாகவே வைஜெயந்திமாலா இருந்திருக்கிறார். இப்பொழுதும் நீங்கள் வரும் படங்களில் வைஜயந்தி மாலா என்று சொல்பவர்களும் உண்டு. அவர் நடிப்பில் மட்டுமல்ல அரசியலிலும் கலக்கினார் இவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

 

முறையாக நடனம் கற்று தனது 13 ஆம் வயதில் அரங்கேற்றத்தை நடத்தினார்.

 

இவர் சர்ச் பார்க்கில் படிக்கும் போது, சென்னை கோகலே ஹாலில் இவரது பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு ஏவி.எம். அவர்களும், இயக்குநர் எம்.வி.ராமன் அவர்களும் வந்திருந்தனர்.  வைஜயந்தி மாலாவின் அம்மா வசுந்தரா தேவியும் நடிகையாக இருந்தாலும், இவரது பாட்டி  யதுகிரிதேவி மட்டும் தான் ‘சரி’ என்று சொல்லவே, ‘வாழ்க்கை’ படத்தில் வைஜயந்தி மாலா நடிப்பதற்கு மற்றவர்களும் ஒப்புக்கொண்டார்கள். டி.ஆர்.ராமச்சந்திரன் தான் ஹீரோ. ஒரு வருடத்தில் ‘வாழ்க்கை’ படம் முடிந்தது. படத்துக்கு நல்ல வரவேற்பு! நூறு நாட்களைக் கடந்து ஓடியது.

 

அந்த வாழ்க்கை படம் வைஜயந்தி மாலாவின் வாழ்க்கையே புரட்டி போட்டு விட்டது.

 

1958 ஆம் ஆண்டு வஞ்சிக்கோட்டை படம் வெளிவந்தது. இதில் “சாதூரியம் பேசாதடி” என்ற பாடல் பத்மினிக்கும் சரி, வைஜெயந்தி ,மாலாவிற்கும் சரி மிகப்பெரிய ஹிட் ஆனது. இருவர்களது நடனத்தில் யார் நடனம் மிகவும் சிறந்தது என்றே கூறமுடியாத அந்த அளவிற்கு அவர்களது நடனம் இருக்கும்.

 

1968 ஆம் ஆண்டு பிரபல டாக்டர் பாலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். வைஜெயந்தி மாலாவிற்கு கோல்ப் விளையாட மிகவும் பிடிக்கும். அதனால் தனது கணவரின் உதவியுடன் நிறைய கோல்ப் போட்டிகளில் கடந்து  பல வெற்றிகளை கண்டுள்ளார். டெல்லியில் ஏஷியன் கேம்ஸ் நடந்த போது, இந்திய கோல்ஃப் அணியில் இடம்பெற்றதோடு, தொடக்க விழாவில் இந்திய குழுவினருக்கு முதல்வராக அணிவகுப்பிலும் கலந்துகொண்டு சிறப்பித்து உள்ளார்.

 

89 வயதாகும் வைஜெயந்திமாலா இன்றும் கோல்ட் விளையாடுகிறார் என்றால் நம்ப முடிகிறதா?  இன்னும் கோல்பு விளையாடுகிறார். அதை விளையாடினால் தான் மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.

அன்றைய காலத்தில் அனைத்து துறையிலும் தனது பங்கேற்பைத் தந்து மாபெரும் நடிகையாக வலம் வந்தவர் இவர்.

author avatar
Kowsalya