சின்னத்திரையின் சிந்தாமணி ஆக மறுபிரவேசம் செய்த பழம்பெரும் நடிகை!!

Photo of author

By Parthipan K

சின்னத்திரையின் சிந்தாமணி ஆக மறுபிரவேசம் செய்த பழம்பெரும் நடிகை!!

Parthipan K

90-களில் திரைத்துறையில் பெரும் பிரபலமானவர்களின் ஒருவராகவும், இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை விசித்ரா.

இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ராசாத்தி தொடரின் மூலம் சின்னத்திரையில் சிந்தாமணி ஆக மறு பிரவேசம் செய்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார்.

நடிகை விசித்ரா தலைவாசல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த படம் வெளியான பிறகு இவரின் இல்லத்திற்கு ரசிகர்களின் கடிதம் மூட்டை மூட்டையாக குவிய தொடங்கியது.

அப்போதுதான்  இவருக்கு, ரசிகர்கள் என்றால் என்ன, இப்படி கூட ரசிகர்கள் இருப்பார்கள் என்று உணர்ந்தாராம். அதன்பின் அவர் நிறைய படங்களில் நடித்துள்ளார்.தற்போது ஒரு நீண்ட இடைவெளி பிறகு ‘ராசாத்தி’ தொடருக்காக வாய்ப்பு வந்தது.நல்ல பவர்ஃபுல் கதாபாத்திரமாக இருந்தால் நிச்சயம் அவருடைய  ரீ என்ட்ரி  சரியாக இருக்கும் என்று தோன்றி உடனே ஒத்துக் கொண்டாராம்.

அவர் எதிர்பார்த்தது போலவே அந்த தொடரில் சிந்தாமணி கேரக்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறார்.