பாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி!

Photo of author

By Parthipan K

பாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி!

Parthipan K

தெலுங்கு நடிகையான விஜயசாந்தி மீண்டும் பாஜகவில் இணைகிறார். இவர் 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிக் கொண்டு வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் கடந்த சில மாதங்களாக இவர் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பணிகளில் இருந்தும் விலகியே இருந்தார். அதன் பிறகு இவருக்கு காங்கிரஸ் கட்சியில் எந்த வித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை என்றும் இதனால் தான் இந்த கட்சியை விட்டு விலக உள்ளதாகவும்  அறிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி, நேற்று பாஜக கட்சியின் தெலுங்கானா தலைவர் சஞ்சய் குமார் உடன், மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது பாஜக கட்சி பிரமுகர்களும் உடனிருந்தனர்.

அப்போது ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதற்குப் பின்னர் நடிகை விஜயசாந்தி பாஜக கட்சியில் இன்று முறைப்படி இணைய உள்ளதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.