கேரளாவில் பிறந்த இவர், தமிழ் சினிமாவில் களைக் கட்டிக் கொண்டிருக்கும் நடிகையாக வலம் வருகிறார். ஒரு பிரபல இயக்குனரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர், பின்பு மனக்கசப்பால் விவாகரத்து செய்து கொண்டார். இவரது இரண்டாம் திருமணம் நடப்பதற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. கர்ப்பமாகிய நிலையில்தான் திருமணம் செய்துள்ளார். அந்த நடிகை வேறு யாருமில்லை, நடிகை “அமலா பால்” தான்.
தமிழில் “சிந்து சமவெளி” என்னும் படத்தில் அறிமுகமானார். ஆனால், இவருக்குப் பெரும் வரவேற்பை பெற்று தந்த படம் “மைனா” தான். அந்தப் படத்தில் நடித்த பின்பு பல வாய்ப்புகளும், பாராட்டுகளும் அவருக்குக் குவிந்து வந்தன. இதனால், அமலா பால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தார்.
“தலைவா” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த அமலா பால், இயக்குனர் விஜயோடு காதல் வயப்பட்டார். இருவரும் காதலித்து வந்தனர். இதனையடுத்து, கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்பும் பல படங்களில் நடித்து வந்தார். சில நாட்களுக்குப் பிறகு இயக்குனர் விஜயோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அமலா பால் அவரைக் கடந்த 2017-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
விவாகரத்திற்குப் பிறகு “ஆடை” என்கின்ற திரைப்படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு கோலிவுட்டில் வாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை. இருந்தாலும் ஹிந்தியில் “போலா”, மலையாளத்தில் “ஆடு ஜீவிதம்” மற்றும் லெவல் கிராஸ் என அடுத்தடுத்து அவருக்கு ஹிட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன.
இந்நிலையில், கடந்த ஆண்டு நடிகை அமலா பால் ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான 8 மாதங்களிலேயே குழந்தையைப் பெற்றெடுத்தார். இதன் மூலமாக அவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டார் என்பது தெரியவந்தது. நடிகை அமலா பாலுக்குக் கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததற்குப் பின்பு சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்து விட்டு குழந்தையை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நடிகை அமலா பால் குழந்தைப் பருவத்தில் எடுத்த புகைப்படம் சமூகத் வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.