தத்தளிக்கும் கடலில் நின்று போஸ் கொடுத்த நடிகை!! வைரலாகும் புகைப்படம்!!

Photo of author

By CineDesk

தத்தளிக்கும் கடலில் நின்று போஸ் கொடுத்த நடிகை!! வைரலாகும் புகைப்படம்!!

கீர்த்தி சுரேஷ் இவர் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வெற்றி வாகை சூடியுள்ளார். இவர் 2000 களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். இவர் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவருக்கு பல விருதுகளையும் பெற்று தந்துள்ளது தமிழ் சினிமா. இதை தொடர்ந்து இவர் அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அப்படி வெளியிடும் புகைப்படங்களில் சில புகைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வலைதளங்களில் வைரல் ஆகி வரும். இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடலில் நின்று எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இவரின் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரசிக்கப்பட்டு வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர். வைரலாகும் கீர்த்தி சுரேஷின் அந்த புகைப்படம் செய்தியின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.