அமெரிக்காவில் சைக்காலஜி படிக்க ஆசைப்பட்ட நடிகை!! சிபாரிசு கடிதம் தர மறுத்த கமல்!!

Photo of author

By Gayathri

ஏசியா நெட் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கி அதன் பின் கதாபுருஷன் திரைப்படத்தின் மூலம் திரைதுறையில் அறிமுகமானவர். பெரும்பாலும் படிப்பில் ஆர்வமிக்கவராகவே நடிகை அபிராமி அவர்கள் விளங்கினார்.

2004 ஆம் ஆண்டு வரை திரை துறையில் இருந்த நடிகை அபிராமி அவர்கள் அதன் பெண் தன்னுடைய படிப்பிற்காக அமெரிக்காவிற்கு தன்னுடைய குடும்பத்துடன் இடம்பெயர்ந்து விட்டார். இது குறித்து நடிகை அபிராமி அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கும் விஷயமானது தற்பொழுது ரசிகர்களிடையே அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

நடிகை அபிராமி அவர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததற்கான காரணத்தையும் அப்பொழுது நடந்த நிகழ்வையும் பற்றி தெரிவித்திருப்பதாவது :-

விருமாண்டி திரைப்படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு வந்த பொழுது அமெரிக்காவில் சைக்காலஜி படிப்பதற்காக நடிகை அபிராமி அவர்கள் விண்ணப்பித்திருக்கிறார். அப்பொழுது பெரிய நபர் ஒருவரினுடைய சிபாரிசு கடிதம் கேட்டதால், நடிகர் கமலஹாசனிடம் சென்று சிபாரிசு கடிதம் கேட்டுள்ளார்.

ஆனால் நடிகர் கமலஹாசன் அவர்கள் அபிராமி அவர்களுக்கு சிபாரிசு கடிதம் கொடுக்க மறுத்துவிட்டார் என்றும் அதன் பின் தமிழ் சினிமா துறையில் நீண்ட காலம் இருக்க வேண்டும் எனவே நீ வெளிநாடுகளுக்கு சென்று படிக்க வேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அபிராமி அவர்களுக்கு படிப்பின் மீது கொண்ட நாட்டத்தினால் அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் தொடர்ந்து முயற்சி செய்து விருமாண்டி படம் முடிவடைந்த நிலையில் அட்மிஷனும் கிடைக்கவே குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.