சினிமா இண்டஸ்ட்ரி பற்றி நினைக்காமல் தன்னுடைய வாழ்க்கை குறித்து முடிவெடுத்த நடிகைகள்!!

Photo of author

By Gayathri

சினிமா துறையை பொறுத்தவரையில் திருமணம் என்பது பெண்களுக்கு 30 வயதிற்கு மேல்தான் நடக்கிறது. ஆனால் ஆண்களுக்கோ சரியான வயதில் திருமணம் நடந்து முடிந்து விடுகிறது. ஏனெனில், ஆண்களுக்கு திருமணம் நடப்பதனால் அவர்களுடைய கேரியரில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஆனால் பெண்களுக்கு அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை.

அதனால் பொதுவாகவே நடிகைகள் தன்னுடைய கேரியரில் பல படங்களை நடித்து முடித்த பின்பு தான் திருமணம் செய்து கொள்கின்றனர்.

ஆனால், கேரியரை விட தன்னுடைய வாழ்க்கையை முக்கியமான சினிமா துறையை துறந்த உச்ச நடிகைகளை பற்றி தான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம்.

நடிகை ஷாலினி அவர்கள் :-

தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் நடிகர் அஜித்துடன் அவர் பட்ட காதலினால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட பின்பு சினிமாத்துறைக்கு இவர் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன்னுடைய குடும்ப வாழ்வை முக்கியம் என சினிமா துறையை துறந்தவர் இவர் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் அஜித்தினை காதலித்து திருமணம் செய்து கொண்ட பொழுது நடிகை ஷாலினிக்கு 21 வயது மட்டுமே.

நடிகை ஜெனிலியா அவர்கள் :-

நடிகை ஜெனிலியா, பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் இருவரின் உடைய முதல் படத்திலிருந்து காதல் மலர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகை ஜெனிலியா அவர்கள் தன்னுடைய 24 வயதில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வந்து கொண்டிருக்கிறார்.

நடிகை அதிதி ராவ் அவர்கள் :-

இவர் நடிகர் சித்தார்த்தை சமீபத்தில் இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர் வெறும் 24 வயது இருக்கும் போது சத்யதீப் மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின் சில காரணத்தினால் பிரிந்து விட்டார். அதன் பிறகு தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர், திடீரென யாரிடமும் தெரிவிக்காமல் நடிகர் சித்தார்த் அவர்களை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

நடிகை அமலாபால் அவர்கள் :-

தற்பொழுது நடிகை அமலாபால் அவர்களுடைய குடும்ப புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற வருகிறது. மைனா படத்தின் மூலம் அறிமுகமான இவர், தன்னுடைய 23 வயதிலேயே இயக்குனர் எ.எல். விஜயை திருமணம் செய்துகொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்து விட்டனர். இதை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். ஆடை படம் இவருக்கு மோசமான விமர்சனங்களை பெற்று தந்தது. தற்போது கர்ப்பத்துக்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக உள்ளார்.