தமிழ் திரையுலகில் மர்மமான முறையில் இறந்த நடிகைகள் ஷோபா, ஸ்ரீதேவி, மோனல், சில்க் ஸ்மிதா, வி.ஜே.சித்ரா இவர்கள் சந்தேகமான முறையில் இறந்தவர்கள். இவர்கள் பிரபலமான நடிகைகள் இன்றும் ரசிகர்கள் இடையில் பேசப்படும் நடிகைகளாகும். இதில் சில மரணங்கள் தற்கொலை என கூறினாலும் அவை இன்னும் எதனால் இந்த முடிவு என்ற சந்தேகத்தில் உள்ளது.
ஷோபா:
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை ஷோபா இவர் ரஜினிகாந்துடன் முள்ளும் மலரும் படத்தில் நடித்தவர். இயக்குனர் பாலு மகேந்திர மனைவி அவர். முள்ளும் மலரும் படத்தில் ரஜினிகாந்த்க்கு சோபா தங்கையாகவும், ஜெயலட்சுமி மனைவியாகவும், நடித்துயுள்ளார். இதில் ஜெயலட்சுமி 1979-ஆம் ஆண்டும், ஷோபா 1980-ஆம் ஆண்டும் தற்கொலை செய்துக்கொண்டனார். ஷோபா தனது 17 வயதிலே இறந்திவிட்டார்.
சில்க் ஸ்மிதா:
இவரை பற்றி அறியாதவர்கள் எவரும் இல்லை நடிப்பு மற்றும் நடனத்தில் இவரை மிஞ்ச யாரும் இல்லை. இன்றும் இவரது நடிப்பை ரசிப்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால் 1996 ஆம் ஆண்டு, ஒரு ஹோட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் இவர் உயிரிழந்தார். சொல்லப்படாத காரணங்களால் தான் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
வி.ஜே.சித்ரா:
இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிகையாகவும், தொகுப்பாளராகவும் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் வெள்ளித்திரையிலும் கால்ஸ் திரைப்படத்தில் நடித்தார். மிகச் சிறந்த நடிகையாக பல கஷ்டங்களைச் சந்தித்து இந்த நிலையை அடைந்தார். ஆனால் இப்படிப்பட்ட முடிவு எடுப்பார் என்று யாரும் நினைக்கவில்லை. அவரின் கணவர் ஹேமந்த் ரவியுடன் ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக ஹோட்டலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மோனல்:
நடிகை மோனல் “பார்வை ஒன்றே” போதும் படத்தின் முலம் அறிமுகமானவர். நடிகை சிம்ரனின் தங்கை. தனது 21வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்ரீதேவி:
இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாகவே திரைத்துறையில் அறிமுகமானார். இவர் துபாயில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஹோட்டல் குளியலறையில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இரத்த அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.