கடுமையான காது வலி, காது இரைச்சல் ஒரே நாளில் சரியாக இதை செய்யுங்கள்!!

Photo of author

By Selvarani

கடுமையான காது வலி, காது இரைச்சல் ஒரே நாளில் சரியாக இதை செய்யுங்கள்!!

காது மூன்று பகுதிகளாக வெளிக்காது, நடுக்காது, உட்காது என்று பிரிக்கப்பட்டுள்ளது. காது வலிக்கு காரணங்கள் பல உண்டு. சைனஸ், நோய்த்தொற்று, காது குழாய், டான்சில் சதை வளர்ச்சி, கழுத்தெழும்பு தேய்மானம், வாய்ப்புண்கள், நாக்கில் உண்டாகும் புண், பற்சொத்தை கடைவாய்ப்பல் வலி போன்ற காரணங்களால் காதுவலி உண்டாகக்கூடும். அதோடு காதில் அழற்சி, புண், சீழ், இரைச்சல் போன்ற கோளாறுகளையும் உண்டாக்குகின்றன. இந்த காதுவலியை சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. தேங்காய் எண்ணெய்-100ml
2. ஊமத்தை இலை

செய்முறை:

ஊமத்தை இலை நன்றாக பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். ஊமத்தை இலை சாறு 100 ml தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு வாணலில் 100 ml தேங்காய் எண்ணெயுடன் ஊமத்தை இலை சாறையும் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். அப்பொழுது சடை சடவென பொரிந்து நீர் சுண்டி வரும். அந்த சமயத்தில் வாணலுடன் வெயிலில் எடுத்துக் கொண்டு போய் வைக்கும் பொழுது மீதமுள்ள நீர் சுண்டி சரியான பதத்திற்கு வரும். பின்னர் இந்த எண்ணையை வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மூலிகை எண்ணெயை காதில் விட்டு சிறிது நேரம் உறங்கி வருகையில் காது வலி, காது இரைச்சல், கால் சீல் வடிதல் இப்படிப்பட்ட காது சம்பந்தமான பல பிரச்சினைகளை இது சரி செய்யும்.

இதனை செய்யாமல் இருந்தால் காது வலி வராது:

காதுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்கிற திரவம் சுரப்பதால் அழுக்கு தானே வெளியேறிவிடும். அதனால் காதுக்குள் குச்சி, பட்ஸ் விட்டு சுத்தம் செய்யக் கூடாது.

80 முதல் 85 டெசிபல் வரைதான் நம் காது சப்தத்தைத் தாங்கும். அதற்கு மேல் என்றால் சவ்வு கிழிந்துவிடும். அதனால் அதிக சப்தத்தைத் தவிர்க்கவும்.

சைனஸ், டான்சில், தாடை எலும்பில் பிரச்னை என்றால் காது வலிக்கும். உடனே அது தொடர்பான சிகிச்சை எடுத்துக் கொண்டால் காது வலி நிற்கும்.