அட ஆர்யா படத்தின் கதாநாயகியாக!! வைரலாகும் புகைப்படம்!!

Photo of author

By CineDesk

அட ஆர்யா படத்தின் கதாநாயகியாக!! வைரலாகும் புகைப்படம்!!

தற்போது தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக துஷாரா விஜயன் விளங்குகிறார். இவர் நிப்டிலிருந்து பேஷன் டிசைன் படிக்கும்போதே மாடலிங் செய்ய தொடங்கி விட்டார். 2006 ஆம் ஆண்டு முதல் ஒரு தொழில் முறை மாடலாகவும், நடிகையாகவும் பணியாற்ற துவங்கினார். அதன் பிறகு அவர் சில திரைப்படங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியவற்றில் பணியாற்றியிருந்தார்.

நடிகை துஷாரா விஜயன் மாடலாக பாலம் சில்க்ஸ், காமதேனு ஜுவல்லரி, 3 ரோஸஸ் கோ-ஆப்டெக்ஸ், ஶ்ரீ தேவி ஜுவல்லர்ஸ், மேபெல் , எஸ் கே சி போன்ற சிறந்த பிராண்டுகளின் விளம்பரங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில் அவர் சென்னையில் மிஸ் பேஸையும், அதே ஆண்டில் தென்னிந்தியா இரண்டாவது ரன்னர் அப் விருதையும் வென்றார்.

இந்த நிலையில் தற்போது அண்மையில் வெளியான பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை துஷர துஷாரா விஜயன் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் இந்த திரைப்படத்தில் குடும்ப பெண்ணாக தாவணி பாவாடை உடையில் நடித்தார். ஆனால் அவர் நிஜ வாழ்க்கையில் பெரிய மாடல். அவர் பொதுவாக மாடர்ன் உடைகளை அணிவது தான் வழக்கம். இந்நிலையில் இவர் சார்பட்டா பரம்பரை படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்தது ரசிகர்களுக்கு புதுவித உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து இவர் சமூக வலைதளங்களில் அவ்வபோது சில போட்டோக்களை பதிவிட்டு வருவார். அதில் தற்போது வெளியான ஒரு புகைப்படம் அட இவங்களா? என்ன என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அவரின் புகைப்படம் உள்ளது. அந்த புகைப்படம் செய்தி இடையில் இணைக்கப்பட்டுள்ளது.