எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த காரணத்தினால் இன்று ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக இந்த இடை நீக்கமானது கடந்த 2 நாட்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு குறிப்பாக முதல்வரை சந்திக்கும் முன் அறிவித்துள்ளனர்.
இதன் பின்னணியாக ஆளும் கட்சியின் அழுத்தம் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. கருத்து சுதந்திரம் உள்ளது எனக் கூறும் திருமா வே பலமுறை ஆளும் அரசை எதிர்த்து கூட்டணியில் இருக்கும் பொழுதே போராட்டம் நடத்தியுள்ளார். அவ்வாறு இருக்கும் பொழுது கட்சியை எந்த இடத்தில் வைத்துள்ளார்கள் என சம உரிமை பற்றி பேச கருத்து சுதந்திரம் இல்லை.
அந்தவகையில் ஒழுங்கு நடவடிக்கையானது ஆதவ் அர்ஜூனா மீது தற்பொழுது எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், ஒரு கூட்டணியில் இருக்கும் பொழுது நல்ல கருத்துக்கு மாறாக பேசுவது மிகவும் தவறான ஒன்று, மேற்கொண்டு நான் நடவடிக்கை எடுக்காமிலிருந்தால் நான் தான் சொல்லி இதையெல்லாம் பேசினார் என தேவையற்ற விமர்சனங்கள் முன் வைக்கப்படும்.
மேற்கொண்டு அவர் மன்னிக்கபப்டுவரா அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தற்பொழுது தான் நாங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளோம் இதையடுத்து அவரது தரப்பு கருத்தை தெரிவிக்கும் பொழுது மீண்டும் ஆலோசனை செய்யப்படும் எனக் கூறினார்.
அதுமட்டுமின்றி இன்று முதல்வர் சந்திப்புக்கும் அதற்கும் எந்த ஒரு சம்மதமும் இல்லை. இது புயல் நிவாரண நிதி வழங்குவதற்காக முன் கூட்டியே அனுமதி பெறப்பட்டது தான் என தெரிவித்தார்.