பெண்கள் பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் மிக முக்கியமான பிரச்சனை என்னவென்றால் அது தலைமுடி சார்ந்த பிரச்சனைதான். அதாவது தலைமுடி நீளமாக வளரவில்லை, தலைமுடி அடர்த்தியாக இல்லை, முடி உதிர்கின்றது, இளநரை என்று பலவகையான பிரச்சனைகள் இருக்கின்றது.
பெண்கள் குறிப்பாக தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு பலவகையான எண்ணெய், ஷாம்பு பயன்படுத்தி மேலும் பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே தலைமுடியை இயற்கையாகவே நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர. என்ன. செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* கற்றாழை
* தேங்காய் எண்ணெய்
செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு கடாய் ஒன்று வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதில் கற்றாழையில் இருந்து அதன் ஜெல்லை மட்டும் எடுத்து தேங்காய் எண்ணெயில் சேர்க்க வேண்டும்.
இதை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இது நன்றாக கொதித்த பின்னர் இந்த எண்ணெயை தலைக்கு தேய்க்கலாம். இதை தொடர்ந்து செய்து வந்தாலே தலைமுடி மிக அடர்த்தியாகவும் மிக மிக நீளமாகவும் வளரும்.