மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்திய தமிழக அரசு!

0
180

குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு விளக்கமாக வழங்கப்படும் அளவை விடவும் ஐந்து கிலோ கூடுதலாக அரிசி வழங்க வேண்டும் என்று தமிழக உணவுத்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த சூழ்நிலையில், அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது..

இதில் தமிழ்நாட்டில் 2.9 கோடி அரிசி அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இதில் 18புள்ளி 64 லட்சம் அந்தியோதயா அன்னயோஜனா பிரிவிற்கு மாதா மாதம் 35 கிலோ அரிசியும் 93 லட்சம் முன்னுரிமை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு நபருக்கு தல 55 கிலோவும், மீதம் இருக்கின்ற முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டை தாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசியும் வழங்கப்பட்டு வருகின்றது.

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தேவைக்கு ஏற்றவாறு புழுங்கலரிசி, பச்சரிசி என்று வாங்கிக்கொள்ளலாம். நோய் பரவலின் இரண்டாவது அலை காரணமாக, பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு இதற்கு முன்னரே வழங்கப்படும் உரிமை அளவுடன் ஒரு நபருக்கு கூடுதலாக தலா 5 கிலோ தானியங்கள் போன்றவற்றை விலையில்லாமல் வழங்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

இதற்காக மத்திய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டிற்கு கூடுதலாக அரிசி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசு அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமல்லாமல் முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைதாரர்கள் ஒன்றிணைத்து கூடுதல் அரிசி வழங்கி வருகின்றது. உதாரணமாக இரு அலகு இருக்கின்ற ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ மூன்று அலகு இருக்கின்ற குடும்பத்திற்கு 30 கிலோ அரிசியும் வழங்கப்படும் என்ற அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது உரிமையுடன் சேர்த்து இரண்டு மடங்கு அரிசி கிடைக்கும் என்று தெரிகிறது.

மே மாதம் வழங்க வேண்டிய இந்த கூடுதல் அரிசியானது அடுத்த மாதம் அதாவது ஜூலை மாதம் வழங்கப்படும் என்று மத்திய அரசின் கூடுதல் அரிசியும் சேர்த்து குடும்ப அட்டையிலிருந்து உறுப்பினர்களுக்கு ஏற்றவாறு ஜூன் மாதத்தில் மொத்தமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விவரங்கள் நியாயவிலை கடைகளில் இருக்கின்ற விளம்பரப் பலகைகளில் விளம்பரப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleமாநில முதல்வர்களை ஒன்றிணைக்க முயற்சிக்கும் ஸ்டாலின்! என்ன நடக்க போகிறது?
Next articleஒரு பிரசவத்தில் 1 அல்லது 2 என்றால் நம்பலாம் ஆனால் இத்தனையா?  உலக சாதனை படைத்த பெண்!