சென்னை மக்களுக்கு குடிநீர் வாரியம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!

Photo of author

By Sakthi

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமாக இருக்கும் பூண்டி ஏரியில் 2621 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 645 மில்லியன் கன அடி தண்ணீரும், அதேபோல புழல் ஏரியில் 2880 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரபாக்கம் ஏரியில் 2652 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 470 மில்லியன் கனஅடி மற்றும் வீராணம் ஏரியில் 1352 மில்லியன் கன அடி தண்ணீரும், உட்பட ஒட்டுமொத்தமாக 10 ஆயிரத்து 667 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருக்கிறது என சொல்லப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகருக்கு ஒரு மாதத்திற்கு ஒரு டிஎம்சி குடிநீர் தேவையாக இருக்கிறது தற்போதைய நீர் இருப்பின் அடிப்படையில் அடுத்த 10 மாதங்களில் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய இயலும். இதைத்தவிர வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை மூலமாக ஏரிகளின் நீர் பிடிப்புகள் மூலமாகவும் ஏரிகளுக்கு கூடுதலாக நீர் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இதன் காரணமாக, தற்சமயம் சென்னை நகருக்கு கூடுதலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த வருடம் தொடக்கத்தில் 650 மில்லியன் லிட்டர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. தற்சமயம் இந்த அளவு 933 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக குடிநீர் குழாய்கள் மூலமாக 730 5.90 ஒரு மில்லியன் லிட்டர் விரிவாக்கப்பட்ட மா நகர் பகுதிகளுக்கு குழாய்கள் மூலமாக 127.14 மில்லியன் லிட்டர் லாரிகள் மூலமாக 18.50 மில்லியன் லிட்டர் விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு லாரிகளில் 12 புள்ளி 92 மில்லியன் லிட்டர் உட்பட 894. 48 மில்லியன் லிட்டர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனை தவிர்த்து தொழிற்சாலைகளுக்கு 16.11 மில்லியன் லிட்டரும் ஒட்டு மொத்தமாக வாங்கும் நுகர்வோர்களுக்கு 23.15 மில்லியன் லிட்டர் உட்பட 933.74 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது.

தற்போது இருக்கும் சூழ்நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் ஒட்டு மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடி நீராக இருக்கிறது. ஆனால் தற்சமயம் 10 ஆயிரத்து 667 மில்லியன் கன அடி நீர் அதாவது என்பது புள்ளி 68% ஏரிகளில் நீர் இருப்பு இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், எதிர்வரும் வட கிழக்கு பருவ மழை மூலமாக கிடைக்கும் நீரை சேமித்து வைப்பதற்கு ஏரிகளில் போதுமான இட வசதி கிடையாது.

இதன் காரணமாக, சென்னை மாநகருக்கு ஆயிரம் மில்லியன் லிட்டர் வரையில் கூடுதலாக குடிநீர் விநியோகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. லாரிகளில் குடிநீர் வழங்குவதை சற்று குறைத்துக் கொண்டு குழாய்கள் மூலமாக கூடுதலாக நீர் வினியோகிக்கப்பட இருக்கிறது.

மேலே சொல்லப்பட்ட தகவல்களை சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். தற்சமயம் குடிநீர் வினியோகம் அதிகரிக்கப்பட்டு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.