எனக்கு இங்கே நியாயம் கிடைக்காது! நீதிபதியிடம் முக்கிய மனு கொடுத்த டிஜிபி ராஜேஷ் தாஸ்!

0
194

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் டிஜிபி ராஜேஷ் தாஸ் ஆஜராகி இருக்கிறார். இந்த வழக்கில் செங்கல்பட்டு முன்னாள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணனும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார்.

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். சென்னை உயர்நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை கையில் எடுத்துக்கொண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் தேதிக்குள் இந்த வழக்கை முடித்து வைக்க உத்தரவிட்ட இருக்கிறது. இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே சென்ற ஜூலை மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி இந்த வழக்கு குறித்து 400 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை விழுப்புரம் சிபிசிஐடி காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் உள்ளிட்ட இருவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அந்த சமயத்தில் குற்றப்பத்திரிக்கை நகலை ராஜேஷ் தாஸ் வாங்கிக்கொண்டார்.

இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதாவது ராஜேஷ் தாஸ் இந்த மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அந்த சமயத்தில் ராஜேஷ் தாஸ் தரப்பில் காழ்ப்புணர்ச்சியுடன் காவல்துறை அதிகாரிகள் செயல்படுவதால் வழக்கில் எனக்கு நியாயம் கிடைக்காது. என் மீதான பாலியல் புகார் வழக்கு விசாரணையை தமிழ்நாட்டில் அல்லாமல் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் எனக்கு எதிரான வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் ராஜேஷ். ஆனால் இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இந்த சூழ்நிலையில், இன்று ஆஜரான ராஜேஷ் தாஸ் தரப்பில் இந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்க கூடாது என்று மனு தாக்கல் செய்திருக்கிறார்

Previous articleசென்னை மக்களுக்கு குடிநீர் வாரியம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!
Next articleவெளிவராத புதிய படத்தின் காட்சிகள் இணையத்தில் பரவியதால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here