முதியோர் ஓய்வூதிய தொகை கூடுதல் நிதி ஒதுக்கீடு!! சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை முதன்மை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு!!
சில நாட்கள் முன்பு அமைச்சரவை கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து முதியோர் உதவித் தொகை 1000 ரூபாயிலிருந்து 1,200 ஆக உயர்ந்தப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதிய தொகை ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது என்று தமிழக் அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், இந்தியா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்களுக்கான ஓய்வூதிய திட்டம் ,50 வயதிற்கு மேல் திருமணமாகாத ஏழைப் பெண்களுக்களுக்கான ஓய்வூதிய மற்றும் இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதிய திட்டம் போன்ற திட்டங்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது 1200 ரூபாய் உயர்த்தி உள்ளது தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் பயனாளிகளுக்கு வழங்கபடும். மேலும் இதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவும் தமிழக ராசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் பல முதியோர்கள் பயன்பெறுவார்கள்.
இந்த நிலையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் இந்த உயர்த்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு கூடுதல் நிதி தேவை என்றும், ஆகஸ்ட் மாதம் முதல் அமுல் படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை முதன்மை செயலாளர் கூடுதல் நிதி ஒதுக்கீடு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.