அமைச்சர் நமச்சிவாயத்துக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு!

Photo of author

By Savitha

அமைச்சர் நமச்சிவாயத்துக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு!

முதல்வர் பரிந்துரையின் பேரில் அவருக்கு வெளிநாடு வாழ் இந்தியர் நலன் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உள்துறை, மின்துறை, தொழில் மற்றும் வணிகம், கல்வி, விளையாட்டு, இளைஞர் நலன், முப்படை நலத்துறைகளை ஏற்கனவே கவனித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு கூடுதலாக வெளிநாட்டு வாழ் இந்தியர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ரங்கசாமியிடம் இருந்த இத்துறை தற்போது நமச்சிவாயத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை ரகசியம் காப்பு மற்றும் அமைச்சரவை துறை வெளியிட்டுள்ளது, அதில் 1963 ஆம் ஆண்டு பணி விதிகளின்படி முதல்வரின் பரிந்துரையின் பெயரில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இதற்கான ஆணையை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.