மிகவும் அவசரம்! மோடிக்கு முக்கிய கடிதத்தை எழுதிய பிரபலம்!

0
59

ஊரடங்கு அமலில் இருக்கின்ற மாநிலங்களின் ஏழை மக்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் மத்திய அரசு 6 ஆயிரம் ரூபாய் செலுத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மேற்குவங்க மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, பல மாநிலங்களில் தற்போது நோய்த் தொற்று காரணமாக, போடப்பட்டிருக்கின்ற ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்கள் மற்றும் தினக் கூலிகள் அதோடு தாழ்த்தப்பட்ட பிரிவினர் மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள்.

தற்போது இருந்து வரும் நோய் தொற்று மற்றும் ஊரடங்கு போன்றவற்றை கருத்தில் வைத்து அது போன்ற ஏழை எளிய மக்கள் உட்பட துன்பங்களை சந்திக்கும் மக்களின் நிலைமையைக் கருத்தில் வைத்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த நோய்த் தொற்று காரணமாகவும், அதனால் போடப்பட்டிருக்கும் ஊரடங்கு விளைவாகவும், ஏழை எளிய மக்களின் வருமானம் குறைந்து வருகின்றது. அதோடு அவர்களால் தங்களுடைய குடும்பத்தை நடத்தவும் இயலவில்லை. ஆகவே அது போன்ற மக்கள் கைவிடப்பட்ட நம்பிக்கை இல்லாத ஒரு மோசமான நிலையில் இருந்து வருகிறார்கள். மத்திய அரசு இலவச உணவு தானியங்களை வழங்க வேண்டும் மற்றும் வேலையில்லாதவர்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க தலைவர் பரிந்துரை செய்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இப்போது இருந்தவரும் நோய்த்தொற்று காரணமாக, ஏழை எளியோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் சமூக மக்கள் மேற்கூறிய நிலையில் தான் இருந்து வருகிறார்கள். எனவே அவர்களுடைய நிலைமையை கருத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியின் தலைவரை ஆலோசனை செய்து அதன்படி நீங்கள் மிகத் தீவிரமாக சிந்தனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மேற்குவங்கம் உள்பட ஊரில் அங்கு இருந்து வரும் மாநிலங்களில் தகுதியான அனைத்து ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளும் மத்திய அரசு மாதம் ஆறாயிரம் ரூபாய் நேரடியாக பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.