“அவர்தான் என் கனவு நடிகர்… அவருடன் டான்ஸ் ஆடவேண்டும்” வாரிசு நடிகையின் ஆசை

0
208

“அவர்தான் என் கனவு நடிகர்… அவருடன் டான்ஸ் ஆடவேண்டும்” வாரிசு நடிகையின் ஆசை

நடிகை அதிதி ஷங்கர் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். அவர் நடித்த விருமன் திரைப்படத்தின் வெற்றி அவரை பிரபல நாயகி ஆக்கியுள்ளது.

பிரபல இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். ‘கொம்பன்’ முத்தையா இயக்கும் விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க கார்த்தி கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாகி வெற்றிப் பெற்றுள்ளது.

இந்த படத்தின் ரிலீஸூக்கு முன்பே அதிதி சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒபப்ந்தம் ஆனார். அந்த படத்தில் அவருக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கெல்லாம் அவரின் தந்தை ஷங்கரின் பெயர் பெரிய அளவில் உதவியாக இருந்துள்ளது.

இந்நிலையில் இப்பொழுது அதிதி நடிகர் விஜய்யுடன் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்ற தன்னுடைய ஆசையை வெளியிட்டுள்ளார். அவர் அளித்த ஒரு நேர்காணலில் “விஜய் என்னுடைய கனவு நடிகர்களில் ஒருவர். அவருடன் இணைந்து டான்ஸ் ஆடவேண்டும். அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு” எனக் கூறியுள்ளார்.

இயக்குனர் ஷங்கர், ஈஸ்வரி தம்பதிக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற 2 மகள்கள் உள்ளனர். இவ்விருவரும் மருத்துவம் படித்தவர்கள். இவர்களை தவிர சங்கருக்கு அர்ஜித் என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்தது.

Previous articleபெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்!..மகிழ்ச்சியில் கண் கலங்கி நிற்கும் தாய்!.
Next articleஅம்மானா சும்மா இல்ல டா! தாயை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த  5 வயது சிறுவன்!