அடிதூள்.. ரேஷன் கடை பொருட்கள் வழங்குவதில் புதிய மாற்றம்!! முதலில் இந்த மாவட்டம் தான்!! 

Photo of author

By Rupa

 

ரேஷன் கடைகள் மூலம் தமிழகத்தில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.அதே அளவிற்கு ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை குற்றங்களும் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க பல வழி முறைகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.அதில் ஒன்று தான் வண்டிகளுக்கு பொருத்திய ஜிபிஎஸ் அமைப்பு.ரேஷன் பொருட்களை எடுத்து செல்லும் வண்டிகளில் ஜிபிஎஸ் அமைப்புடன் வரைமுறை உள்ள வழித்தடத்தில் செல்ல வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

அதன் மூலம் ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுக்கப்படும்.இதனைத்தொடர்ந்து ரேஷன் அட்டை தாரர்கள் தவிர்த்து வேறொருவர் அந்த பொருட்களை வாங்க முடியாத அளவிற்கு கை ரேகை மற்றும் கருவிழி பதிவேடு போன்றவற்றையும் அமல்படுத்தினர்.அதுமட்டுமின்றி பொருட்கள் வழங்குவதில் எடையில் மாற்றம் வருவதாக புகார் அளித்து வருகின்றனர்.இதற்கு தீர்வு காணும் வகையில் இனி வரும் நாட்களில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் பாக்கெட் மூலம் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டனர்.

அதன்படி தற்பொழுது முதல் முறையாக தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் ஒரு நியாய விலைக்கடையில் மட்டும் பாக்கெட் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.நாளடைவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளிலும் இது செயல்படுத்தும் என கூறியுள்ளனர்.இதன் மூலம் பொருட்கள் சுகாதாரமாகவும் எடையில் மாற்றமும் வராது என தெரிவித்துள்ளனர்.இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சி செய்தியானதாக உள்ளது.அதுமட்டுமின்றி இனி வரும் நாட்களில் இனி பொருட்கள் தரம் மற்றும் எடையில் எந்த ஒரு புகாரும் வராது என எதிர்பார்க்கபப்டுகிறது.