விருமன் ரிலீஸ் ஆகும் முன்பே அடுத்த படத்தில் கமிட் ஆன அதிதி ஷங்கர்

Photo of author

By Vinoth

விருமன் ரிலீஸ் ஆகும் முன்பே அடுத்த படத்தில் கமிட் ஆன அதிதி ஷங்கர்

Vinoth

விருமன் ரிலீஸ் ஆகும் முன்பே அடுத்த படத்தில் கமிட் ஆன அதிதி ஷங்கர்

இயக்குனர் ஷங்கரின் இளையமகள் அதிதி விருமன் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

இயக்குனர் ஷங்கர், ஈஸ்வரி தம்பதிக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற 2 மகள்கள் உள்ளனர். இவ்விருவரும் மருத்துவம் படித்தவர்கள். இவர்களை தவிர சங்கருக்கு அர்ஜித் என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில் சங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்தது.

இந்நிலையில், சங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ‘கொம்பன்’ முத்தையா இயக்கும் விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநயாகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே இப்போது அதிதி சிம்பு நடிக்க உள்ளதாக சொல்லப்படும் ‘கொரோனா குமார்’ திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒப்பந்தம் ஆகி வரும் அதிதி விரைவில் முன்னணீ நடிகையாவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.