சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் இயக்குனர் ஷங்கரின் மகள்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
79

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் இயக்குனர் ஷங்கரின் மகள்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிதி ஷங்கர் நடித்துள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. படத்தை பிரின்ஸ் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் அருண் விஷ்வா தயாரிக்கிறார்.

இந்த படத்தில் யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மற்ற நடிகர்கள் பற்றிய தகவல் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர். இந்நிலையில் இப்போது படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிதி ஷங்கர் கார்த்தி நடிக்கும் விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படமே இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் தற்போது மற்றொரு முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது அவரின் வளர்ச்சி ஏறுமுகத்தில் செல்வது உறுதியாகியுள்ளது.

அதிதி நடித்துள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.