Breaking: மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!! நாளை இது ஒத்திவைப்பு!!

Breaking: மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!! நாளை இது ஒத்திவைப்பு!!

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கு மாணவர்களை தேர்ந்தெடுக்கும் இணையவழி கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் கட்டமாக ஆகஸ்ட் 20 முதல் 23ஆம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 25ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 23ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற இருந்தது.நாளை நடைபெறவிருந்த இந்த பொது பிரிவினருக்கான கலந்தாய்வு
ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் பொன்முடி
செய்தியாளர்களிடம் பேசியதவாறு:

நீட் தேர்வின் முடிவுகள் வெளியிடுவதில் தாமதமாகியுள்ளதால் மாணவர்களின் நலன் கருதி இந்த பொது பிரிவிற்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், நீட் தேர்வு முடிவுகள் வெளியிட்ட அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் பொதுப் பிரிவு கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment