தொடர்ந்து மூன்று நாட்கள் மழைக்கால கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!! மாநிலங்களவை தலைவர் அதிரடி!!
ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் போராட்டம் நடத்தினார். இந்த பிரச்சனை இனக் கலவரமாக மாறி கடந்த இரண்டு மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.
இதனையடுத்து மழைக்கால கூட்டத் தொடரில் மணிப்பூர் வன்முறை பற்றி விவாதம் நடத்த உள்ளதாக ஏற்கனவே எதிர்கட்சிகள் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கலவரத்தில் மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமையைப் பற்றி விவாதிக்க இரண்டு அவைகளிலும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கடும் வாக்கு வாதத்தியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இதனால் முதல் நாள் முதல் இதுவரை ஒரு மதோக்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பிரதமரை பேச கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்ட வருகிறார்கள். இதன் காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரையும், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றும், திங்கக்கிழமை களை 11 மணிக்கு மாநிலங்களவை தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.