அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான மாணவர்கள் சேர்ப்பு!! ஆன்லைனில் பதிவு தொடங்கம்!!

Photo of author

By Preethi

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான மாணவர்கள் சேர்ப்பு!! ஆன்லைனில் பதிவு தொடங்கம்!!

அண்ணா பல்கலைக்கழகம் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கட்ந்த ஆண்டு மாணவர்கள் சேர்ப்பதில் நேர்முக கலந்தாய்வு இல்லால் நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு கலந்தாய்வை ஆன்லைன் மூலமாக நடத்த இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டிற்கான (2021-22) பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான மாணவர்கள் சேர்ப்பை ஆன்லைன் மூலமாக அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்குநரகமானது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக துறைகளுடன் இணைந்த கல்லூரிகளில் பொறியியல் திட்டங்களுக்கான சேர்க்கை செயல்முறையைத் தொடங்கியுள்ளது.

மேலும், விவரங்களுக்கு www.tneanonline.org ஐப் பார்வையிடலாம் அல்லது DoTE வலைத்தளத்தை www.tndte.gov.in இல் அணுகலாம்.  தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை வலைத்தளத்தில்  அதன் குறியீட்டுடன்  சேர்ந்த கல்லூரி குறியீடுகளின் விவரங்களையும், கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ள அனைத்து கிளைகளின் விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் , பல்வேறு டெமோ வீடியோக்களுக்கான  ஒரு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள்  தங்களின் விவரங்களை  TNEA இணையதளத்தில் பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.

விண்ணப்ப படிவங்களுடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களுக்கான வடிவமைப்பை பெற பல்வேறு வகை விண்ணப்பதாரர்களுக்கான குறிப்பு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பதிவு, பணம் செலுத்துதல், தேர்வு நிரப்புதல், ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்தல் வரை முழு சேர்க்கை செயல்முறையும் ஆன்லைனில் நடத்தப்படும் என்று வலைத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள TNEA 2021 ஐ அணுகுவதற்கான மின்னஞ்சல் [email protected]. தொலைபேசி: 044-22351014 / 044-22351015.