‘ஊதா கலரு சாரீ ‘… பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையை பார்த்து பாட்டு பாடும் ரசிகர்கள்!!

0
132

‘ஊதா கலரு சாரீ ‘… பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையை பார்த்து பாட்டு பாடும் ரசிகர்கள்!!

காவியா அறிவுமணி கோலிவுட் சின்னத்திரையில் நடித்து வருகிறார். மேலும், இவர் ஒருபுறம் மாடலிங்கும் செய்து வருகிறார். இதனை அடுத்து, சமீபத்தில் சிறிது மாதங்களுக்குமுன் விஜே சித்ரா அவர்கள் இறந்துவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே.

இதனை தொடர்ந்து, பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர், அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸில் மிகவும் அனைவருக்கும் பிடித்த கேரக்டரான முல்லை என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார். ஆனால் ரசிகர்களுக்கு சித்ராவை ஒப்பிடும்போது காவியா அறிவுமணியை முதலில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆனால், தற்போது இவர் தன்னுடைய கேரக்டரில் மிகவும் அசத்தி வந்த காரணத்தினால், அனைவரும் இவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு விட்டனர். மேலும், இவரையும் அனைவருக்கும் பிடித்து இவருக்கென முல்லை ஃபேன்பேஜ் புதிதாக உருவாக்கி, இவரை டேக் செய்தும், இவரை குறித்து பல போஸ்ட்களை போட்டும் வருகின்றனர்.

https://www.instagram.com/p/CRwG0YWL5sU/?utm_source=ig_web_copy_link

மேலும், இவர் தன்னுடைய கதாபாத்திரத்தில் கொஞ்சம்கூட அச்சுப் பிசங்காமல் அழகாக நடித்து உள்ளார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்தநிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு இவர்தான் உறுதுணையாக இருந்து வருகிறார். மேலும், கதிர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு இவரே முக்கிய காரணமாகும்.

இவர் அதற்கு உறுதுணையாக இருப்பது மட்டுமல்லாமல், அவரையும் வீட்டிலுள்ள யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்று தேர்வு எழுத வைத்தார். மேலும், இந்த தேர்வில் கதிர் மிகவும் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார். அதற்காக முல்லைப் பெரும் மகிழ்ச்சி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர் வெறும் முல்லையாக மட்டுமில்லாமல் காவியா அறிவுமணியாகவும் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறார். மற்ற நடிகைகளைப் போலவே இவரும் இவருடைய சமூகவலைத்தள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும், மிக அழகு முல்லை கதாபாத்திரத்திலும் நீங்கள் அழகுதான் காவிய அறிவுமணியாக இருந்த போதும் நீங்கள் அழகுதான் என்றும் கூறி வருகின்றனர்.

author avatar
Jayachithra