அப்போ எதிர்த்தோம் இப்போ ஆதரிக்கிறோம்! நாடாளுமன்றத்தில் அதிமுக நிலை?

0
197

அதிமுக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது, அதே அதிமுக, தற்போது அந்தச் சட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளது. இது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் மக்களிடையே வெறுப்பை உண்டாகியது.

முஸ்லீம் பெண்களை தனது கணவர் முத்தலாக் என கூறிவிட்டாள் திருமணம் முறிவு ஏற்பட்டது என்று அர்த்தம். இதனால் அப்பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஒரு குழு கூறி இந்த முத்தலாக் சட்டத்தை தடை செய்ய வேண்டி நாடாளுமன்றத்தில் முறையிடப்பட்டு சட்டம் இயற்ற ஆதரவு கோரினார்.
, ‘முத்தலாக்’ கூறி விவாகரத்து செய்வதை தடுக்கும் வகையில், முத்தலாக் தடை சட்ட மசோதாதாவை முந்தைய அரசில் மோடி அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

குறிப்பாக அதிமுக 37 எம்.பி.களைக் கொண்டு முந்தைய நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மசோதாவின் மீது பேசிய அப்போதைய அதிமுக எம்.பி. அன்வர் ராஜா பிரதமர் மோடி அரசை கடுமையாக நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால்,. அப்போதைய மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

இடையே நாடாளுமன்றத்தேர்தல் வந்ததால், அந்த மசோதா நிலுவையில் இருந்துவந்தது. முந்தைய அரசில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா, அதன் பதவிக்காலம் முடிந்ததும் காலாதியானது. இந்நிலையில் இந்த மசோதா நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு மக்களவையில் மீண்டும் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

கடும் அமளிக்கு பிறகு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளி நடப்பு செய்தனர்.

மக்களவையில் போன ஆட்சியில் தனி மெஜாரிட்டி இல்லாமல் போனதால் நடைமுறை படுத்தமுடியவில்லை. ஆனால் இப்பொழுது பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி இருப்பதால், அந்த மசோதா 303 வாக்குகளுடன் நிறைவேறியது. எதிர்த்து 82 வாக்குகள் பதிவாயின. இந்த மசோதாவுக்கு அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி.யான ஓ. ரவீந்திரநாத் குமார் அளித்தார்.

கடந்த நாடாளுமன்ற அவை டிசம்பரில் இந்த மசோதா கொண்டு அறிமுகமானபோது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, இந்த முறை ஆதரவு தெரிவித்தது. இதனால் இசுலாமிய அமைப்புகள் கடும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleA1 செம்ம காமெடி! சந்தானம் மாஸ்! ரசிகர்கள், மக்களின் review!
Next articleஇந்தியாவின் நிலை இந்நாளில் தான் நிலைநிறுத்தப்பட்டது! கார்கில் 20 இன்று! கார்கில் வரலாறு