உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 4 மாநகராட்சியா? அதிமுகவில் பரபரப்பு

Photo of author

By CineDesk

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 4 மாநகராட்சியா? அதிமுகவில் பரபரப்பு

CineDesk

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 4 மாநகராட்சியா? அதிமுகவில் பரபரப்பு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக மாநகராட்சி தொகுதிகளை கேட்டு வாங்க முடிவு செய்திருப்பதால் இரு கூட்டணிகளும் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது

குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 4 மாநகராட்சி தொகுதிகளை பெற்றே ஆகவேண்டும் என்று அதிமுகவுக்கு அழுத்தம் தருவதால் அதிமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பாஜகவிற்கு கோவை, நாகர்கோவில், திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய மாநகராட்சிகளில் சாதகமாக இருக்கும் என்றும், அதனால் இந்த 4 மாநகராட்சி தொகுதிகளை அதிமுகவிலிருந்து கேட்டுப் பெற வேண்டும் என்றும் பாஜக தமிழக நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் வெறும் ஐந்து தொகுதிகள் மட்டுமே பெற்ற பாஜக, உள்ளாட்சி தேர்தலில் 4 மாநகராட்சி தொகுதிகளை கேட்டிருப்பது அதிமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதேபோல் தேமுதிக 3 மாநகராட்சி தொகுதிகளையும், பாமக 4 மாநகராட்சி தொகுதிகளையும் கேட்டு வலியுறுத்தி வருவதாகவும் இதை எல்லாம் கணக்குப் போட்டுப் பார்க்கும்போது அதிமுகவுக்கு மிகக் குறைவாகவே மாநகராட்சி தொகுதி தேறும் என்றும் கூறப்படுகிறது

மேலும் உள்ளாட்சி தேர்தலில் 15 முதல் 2 சதவீத தொகுதிகளை கேட்டு வாங்க வேண்டும் என்று தேமுதிக மற்றும் பாமக முடிவு செய்து இருப்பதாக கூறப்படுவதால் உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தையின் போது பெரும் சிக்கல் ஏற்படலாம் என்றும் இதனால் கூட்டணியே அடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

அதேபோல் திமுகவிடம் இருந்து 5 மாநகராட்சி தொகுதிகளை கேட்டு பெற காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாகவும் இதனால் அந்த கூட்டணியிலும் சலசலப்பு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் உள்ளாட்சி தேர்தல், கூட்டணியை உடைக்கும் தேர்தலாகவே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது