விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவை கதிகலங்க வைக்கும் பாமக மற்றும் அதிமுக கூட்டணி
தமிழகத்தில் நாங்குநேரி,விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து திமுக மற்றும் அதிமுக சார்பில் இந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலர் விருப்பமனு அளித்திருந்தனர். இதில் விக்கிரவாண்டி தொகுதியை போட்டியிடுவதற்காக திமுக சார்பாக புகழேந்தியை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.அதிமுக சார்பில் இன்னும் யாரையும் வேட்பாளராக அறிவிக்கவில்லை.
விக்கிரவாண்டி தொகுதியை அதிமுக கைப்பற்ற வேண்டுமென்றால் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளரை தான் அங்கு நிறுத்தியாக வேண்டும்.
விழுப்புரத்தை பொறுத்தவரை, திமுகவில் பொன்முடி, அதிமுகவில் அமைச்சர் சி.வி சண்முகம் என இருவரும் மக்களுடன் நல்ல செல்வாக்கை பெற்றவர்கள். இவர்களை போலவே செல்வாக்கு பெற்றவர் தான் அதிமுகவின் முன்னாள் எம்.பி லட்சுமணன். இவர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி அதிமுகவிலிருந்து பிரிந்த போது அவருடைய அணியில் இணைந்து அதிமுகவை உடைத்ததில் பெரும் பங்கு இவருக்கும் உள்ளது. அதாவது ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர் என்றே சொல்லலாம். கடந்த முறை எம்.பி தேர்தலிலேயே இவர் தனக்கு வாய்ப்பு கேட்டிருந்திருக்கிறார். ஆனால் அது சி.வி.சண்முகத்தின் தலையீட்டால் கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். இந்நிலையில் இந்த முறை எப்படியாவது இடைத்தேர்தலிலாவது போட்டியிட வேண்டும் என்று விருப்பமாக இருக்கிறார் என்கிறார்கள்.ஓபிஎஸ் ஆதரவாளரான இவருக்கு சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தாலும் மற்றொரு புறம் அமைச்சர் சி.வி. சண்முகம் தன்னுடைய அண்ணன் ராதாகிருஷ்ணனை இங்கு நிறுத்த வெகு ஆர்வமாக இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
திமுக எம்எல்ஏ மறைந்த உடனேயே, எப்படியும் தன் அண்ணனை இங்கு தான் நிறுத்தியாக வேண்டும் என என்று முடிவு செய்து, அதற்கான பூத் ஏஜென்ட் கவனிப்பு வேலைகளிலும் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது. காரணம் இங்கு அதிமுக, திமுகவிற்கு இணையாக பாமக பலமான வாக்கு வங்கியை வைத்துள்ளது.
இந்த தொகுதியை சேர்ந்த திமுக எம்எல்ஏ மறைந்தது முதலே எப்படியும் தன் அண்ணனை இங்கு தான் நிறுத்தியாக வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான அனைத்து செயல்பாடுகளும் சி.வி.சண்முகம் சார்பாக செய்யப்பட்டு வருகிறது என்கிறார்கள். இவ்வளவு ஈடுபாட்டிற்கு காரணம் இங்கு அதிமுக, திமுகவிற்கு இணையாக தற்போது அதிமுக கூட்டணியிலுள்ள பாமக பலமான வாக்கு வங்கியை வைத்துள்ளது.
வன்னியரான சி.வி.சண்முகத்தின் ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமகவின் வாக்குகள் அப்படியே கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இதையெல்லாம் மனதில் வைத்து தான் எப்படியாவது தனது அண்ணனை களமிறக்க வேண்டும் என பிளான் போட்டு வந்துள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம். ஆனால், அவருடைய மகனுக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டு சிகிச்சையில் இருப்பதால் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் ஆர்வமில்லை என்று சொல்லிவிட்டார் என்கிறார்கள். அவரது அண்ணன் நிறக்கவில்லை என்ற இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்ளே புகுந்து விடலாம் என வேறு யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது.இந்த விக்கிரவாண்டி தொகுதியில் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் மொத்த அதிகாரத்தையும் அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் எடப்பாடி பழனிசாமி வழங்கி விட்டதாக கூறுகிறார்கள்.
அதனால், தற்போது அமைச்சர் சி.வி சண்முகம் மனசு வைத்தால் இந்த தொகுதியில் யார் நின்றாலும் சர்வ சாதாரணமாகவே வெற்றி பெற்று விடலாம் என்பதால் அதிமுகவினர் பலரும் விக்கிரவாண்டிக்காக போட்டி போட்டு வருகின்றனர்.
இதற்கான முழுமையான காரணம் விழுப்புரத்தில் தனி செல்வாக்குடன் வலம் வருபவர் தான் இந்த சி.வி சண்முகம்.இவர் கடந்த காலங்களில் நடந்த 2001, 2006 என இரண்டு முறை திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தார். விழுப்புரம் திமுகவின் கோட்டை என பெருமைப்பட்டு கொண்டிருந்த திமுகவின் அமைச்சர்களில் ஒருவரான பொன்முடியை 2011 இல் நடந்த தேர்தலில் சி.வி.சண்முகம் மண்ணைக் கவ்வ வைத்தார். அடுத்து அவரை 2016 தேர்தலில் திருக்கோவிலூருக்கு துரத்திய பெருமையும் அமைச்சர் சி.வி.சண்முகத்தையே சாரும். இவ்வாறு இவர் களத்தில் இருந்தால் எதிரி காலி என்னும் அளவிற்கு இந்த பகுதியில் அவருக்கு செல்வாக்கு உள்ளது.மேலும் இது பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் சொந்த ஊர் என்பதாலும்,கடந்த தேர்தலில் தனியாக போட்டியிட்டே 41000 வாக்குகளுக்கு மேல் பாமக பெற்றுள்ளது என்பதாலும் அதிமுகவின் வெற்றியை இது உறுதி செய்கிறது.அதனால் இவ்வளவு வெற்றி வாய்ப்புள்ள விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட அதிமுகவினர் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
மறுபுறம் தற்போதைய திமுக நாடாளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதாலும், அவரும் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், பண விஷயத்தில் சிவி சண்முகத்தை சமாளிக்க கூடியவராக இருப்பதாலும் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்தை விக்கிரவாண்டியில் நிறுத்தினால் நல்லாருக்கும் என ஸ்டாலினுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது, இந்த செய்தி பொன்முடிக்கு தெரியவர விருப்பமே இல்லாத புகழேந்தியை இந்த தொகுதியில் இழுத்து விட்டுள்ளார்.
திமுக வேட்பாளராக அறிவிக்கபட்ட புகழேந்திக்கு இந்த தெர்தலில் போட்டியிட விருப்பமே இல்லை என்கிறார்கள், இதற்கான காரணம் இன்னும் இந்த ஆட்சி முடிய ஏறக்குறைய 15 மாதங்கள் மட்டுமே உள்ளது, இந்த 15 மாதங்களுக்காக கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி இந்த தேர்தலில் போட்டியிட வேண்டுமா? நான் ஜெயித்தாலும் பெருசா எந்த ஆட்சி மாற்றமும் ஏற்பட போவதில்லை, எக்ஸ்டராவா ஒரு எம்.எல்.ஏ அவ்வளவு தான் அதற்காக நான் நிற்க்கணுமா? வேற யாருக்காவது இந்த வாய்ப்பை கொடுத்திருங்கன்னு எஸ்கேப் ஆக பார்த்திருக்கிறார். ஆனாலும் ஜேகத்ரட்சகனின் குடும்பத்தை இங்கே வர விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவும்,பொன்முடியும் தன்னுடைய செல்வாக்கை இழந்து விடக்கூடாது என்பதற்காகவும் இவரை களமிறக்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், திமுக சார்பாக எத்தனை கோடிகள் வாரி இறைத்தலும் பாமகவின் வாக்கு வங்கி, அதிமுக அமைச்சரான சி.வி.சண்முகத்தின் செல்வாக்கை மீறி நம்ம ஆள ஜெயிக்க வைக்க முடியுமா? இந்த இடைத்தேர்தலில் தோல்வியடைந்தால் மக்களவை தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்ததால் தான் வெற்றி பெற்றது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனம் உண்மையாகி விடுமே என்றும் திமுகவினர் கதி கலங்கி நிற்கிறார்களாம்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.