அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல்! தனித்து போட்டியிட பாமக முடிவு? ஜி.கே மணி அதிரடி அறிவிப்பு

0
124

அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல்! தனித்து போட்டியிட பாமக முடிவு? ஜி.கே மணி அதிரடி அறிவிப்பு

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தந்தால் தான் கூட்டணி என்றும், இல்லையேல் பாமக தனித்துப் போட்டியிடும் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி சேலத்தில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியில் இருப்பார்களா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பாமக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி கொண்டு வருகிறது. கூட்டணியில் இருந்து கொண்டே ஆளும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி கொண்டு வருவதால் ,பாமக அதிமுக கூட்டணி தொடருமா அல்லது கூட்டணியை முறித்து கொள்ளுமா என்று புரியாத புதிராகவே உள்ளது.

ஏற்கனவே 5 கட்டங்களாக போராட்டம் நடத்திய பாமக வரும் ஜனவரி 29 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

இதனிடையே சேலம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் ஜி.கே. மணி, தமிழகத்தில் 2016 சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே தனித்து நின்று மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பாமக பெற்றது. தற்போது எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்போம் அல்லது தனித்து போட்டியா என்பதை வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சினை முடிந்தவுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பவர் என்று கூறியிருந்தார்.

மேலும் வன்னியர்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற தேவையான இட ஒதுக்கீடுக்கு கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம் .இந்த எடப்பாடி அதிமுக அரசு வன்னியர்களுக்கு தேவையான இட ஒதுக்கீடு தரும் பட்சத்தில் அவர்களுடன் கூட்டணி வைக்கலாம் என்றும், கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு எந்தெந்த தொகுதி பங்கீடு அமையும் என்று கூறியிருந்தார்.

Previous articleஇந்த ராசிக்கு பொன் பொருள் சேரும்! இன்றைய ராசி பலன் 21-01-2021 Today Rasi Palan 21-01-2021
Next articleஅமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவி ஏற்றார் ஜோபிடன்!