ADMK BJP: அதிமுக கட்சிக்குள் நான்கு முனைகளாக பிளவு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஒற்றை தலைமைக்காக ஓபிஎஸ் சசிகலா வெளியேறிய நிலையில் அச்சமயம் இரண்டு அணிகளானது. மேலும் செங்கோட்டையன் ஒன்றிணைந்த அதிமுக வேண்டும் எனக் கூறியதோடு எடப்பாடிக்கு 10 நாள் கெடுவும் வைத்துள்ளார். இதனை சிறிதும் கூட பொருட்படுத்தாமல் எடப்பாடி மறுநாளே அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். அதன் சூடு குறைவதற்குள் செங்கோட்டையன் டெல்லி சென்று நிதியமைச்சர் மற்றும் மத்திய மத்திரியை சந்தித்துள்ளார்.
இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை பாஜக நேரில் பார்க்க அனுமதி வழங்காத போது இவரை மட்டும் பார்க்க காரணம் என்ன என்று குழப்ப நிலையிலேயே உள்ளனர். பாஜக தங்கள் கீழ் அதிமுக-வை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பது தான் மாஸ்டர் பிளான். அதனால் தான் கூட்டணி ஆட்சி என கூறி வருகின்றனர். ஆனால் இதற்குள் ஏதேனும் உள் சதி ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகமும் உள்ளது. இன்று செங்கோட்டையன் கெடு வைத்த கடைசி நாள். இவரது அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், மறப்போம் மன்னிப்போம் என்ற அண்ணாவின் எழுத்துக்களை நினைவூட்டுகிறேன், எம்ஜிஆர் ஜெயலலிதா கட்டி காத்த இந்த கட்சியை 100 ஆண்டு காலத்துக்கு ஆட்சி கட்டிலில் அமர வேண்டும். என் கருத்தை நான் தெரிவித்ததன் பெயரில் பலரது மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிமுக பிளவுபட்டு இருப்பதால் அதன் வலிமைக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.