ADMK BJP: அதிமுக பாஜக கட்சிகளிடையே மீண்டும் விரிசல் உருவாக ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் தமிழகத்திற்கு அமித்ஷா வருகை புரிந்த போது அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார். இந்த கூட்டணிக்காக அண்ணாமலையையே பதவியில் இருந்து விலகுமாறு கூறினர். இதற்கு பதிலாக நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அமைச்சர் கூட்டணி உறுதி செய்த போது மத்தியில் ஆளுவதற்கு மோடியும் மாநிலத்தில் எடப்பாடி எனக் கூறியிருந்தார்.
மேற்கொண்டு இவர்கள் கூட்டணி முறிந்து மீண்டும் இணைந்து தான் கூட்டணி ஆட்சி தான் இவர்களின் அக்ரீமெண்ட் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதனை முழுமையாக மறுத்து வருகிறார். மற்ற கட்சிகளைப் போல நாங்களும் கூட்டணி வைத்துக் கொண்டுமே தவிர இரண்டு கட்சியும் சேர்ந்து ஆட்சி செய்யப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதேபோல நாங்கள் மீண்டும் கூட்டணி வைத்தது ரீதியாக ஆளும் கட்சி உள்ளிட்டோருக்கு பயம் வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இப்படி கூட்டணி ஆட்சி இல்லை என்று எடப்பாடி கூறிய நிலையில் இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதில், அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் முடிவை எடுத்தது தலைமைதான். அதனால் கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பதை அவர்களே பேசி முடிவெடுப்பார்கள் என்று சூசகமாக கூறி பின் வாங்கிக் கொண்டார். அதுமட்டுமின்றி நான் தென்றல் மாதிரி அண்ணாமலை புயல் மாதிரி என்று ஒப்பிட்டும் பேசினார்.
அதில் இவர் மறைமுகமாக கூற வருவது என்னவென்றால், ஆனா அண்ணாமலை போல் கூட்டணி கட்சி குறித்து பேச மாட்டேன் என்பதுதான். இப்படி இரு கட்சிகளும் இணைந்து நிலையில் முன்னுக்கு பின்னாக கூட்டணி ஆட்சி அமைக்க மாட்டோம் என்று அதிமுக தடாலடி காட்டுவது மீண்டும் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.