ADMK BJP: 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைப்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டமானது நேற்று நடைபெற்றது. இந்த கூட்டமானது பல தரப்பின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடந்துள்ளது. விஜய் கட்சி தொடங்கி தனது முதல் மாட்டில் அரசியல் எதிரி யார் என்று தெளிவு படுத்தியவுடன் பெருமாபாலும் அதிமுக-வுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறினர். ஆனால் அவ்வாறு வெளியாகும் தகவல் போலியானவை, அஇஅதிமுக வுடன் கூட்டணி என்று ஏதுமில்லை என தமிழக வெற்றிக் கழக சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இதனிடையே அதிமுக-வின் அடுத்த அரசியல் நகர்வு யாருடன் இருக்கும்? மீண்டும் பாஜகவுடன் இணைய வாய்ப்புள்ளதா என கேள்விகள் முன் வைக்கப்பட்டது. அச்சமயம் பாஜக அண்ணாமலையும் தனது அரசியல் ரீதியான மேற்படிப்பிற்காக லண்டன் சென்றிருந்தார். இந்த சூழலை பயன்படுத்தி அதிமுக மற்றும் பாஜகவிற்கு இடையே இருந்த பனிப்போர் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி கட்டாயம் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என ஆணித்தரமாக கூறிவிட்டார்.
இது பாஜக-விற்கு பாதகமாகவே அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி மேற்கொண்டு அண்ணாமலை வெளிநாட்டிலிருந்து வந்ததிலிருந்து அவரது அரசியல் உத்வேகமானது சற்று குறைந்தே காணப்படுகிறது. இதன் முக்கிய காரணமாக இவரது பதவி பறிக்கப்படலாம் என கமலாலயத்தில் பேச்சுக்கள் அடிப்பட்டு வருகிறது. இவரது இடத்திற்கு வேறு ஒருவர் வரும் பட்சத்தில் அதிமுக மீண்டும் இணைய வாய்ப்புள்ளது.
அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் உருவான என்டிஏ கூட்டணிக்கு அதிகளவு வாய்ப்புள்ளது, அதாவது பாமக,பாஜக புதிய தமிழகத்துடன் மீண்டும் அஇஅதிமுக கைக்கோர்க்கும் என கூறுகின்றனர். இதன் முடிவாகத்தான் நேற்று நடந்து முடிந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கட்டாயம் மக்கள் விருப்பும் மற்றும் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும் என கூறியுள்ளார். இது அனைத்தும் என்டிஏ கூட்டணிக்கு வழிவகுக்கும் படியாக உள்ளது.