அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது! எதிர்க் கட்சியில் நடக்கும் அடுத்தடுத்து குளறுபடி!
திமுக பத்தாண்டுகளில் ஆட்சியை கைப்பற்றியது. மக்களின் ஓட்டுக்களை கவர பல அறிக்கைகளை வெளியிட்டது. அதுமட்டுமின்றி முதன்முறையாக புத்தக வடிவில் அறிக்கை வெளியிட்டது திமுக வையே சேரும். இதில் பெரும்பாலான அறிக்கைகள் வெறும் கண்துடைப்பு என்று மக்களுக்கு அப்பொழுது தெரியவில்லை. ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் ஐந்து சிறப்பு திட்டங்களில் தி மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதில் ஒன்று தான் பால் விலை குறைப்பு. ஒருபுறம் விலையை குறைப்பது போல் குறைத்துவிட்டு மற்றொருபுறம் அதை சார்ந்த பொருட்களின் விலையை உயர்த்தி விட்டனர். தற்பொழுது வரை அனைத்தின் விலைவாசியும் அதிகரித்தே காணப்படுகிறது.
அதுமட்டுமின்றி அதிமுகவில் செயல்பட்டு வந்த பல திட்டங்களை திமுக அரசு முயற்சித்து வருகிறது. அந்த வகையில் அதிமுக அரசின் போது கிராமப்புற மக்கள் தொலைதூரம் சென்று சிகிச்சை பெற சிரமமாக இருக்கும் நிலையில் அவரவர் ஊரின் உள்ளே சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. அத்திட்டம் யாருக்கும் பயன்படுவதில்லை எனக்கூறி திமுக அரசு தடை செய்தது. அந்தவகையில் தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை தற்பொழுது மாற்றி அமைத்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தாலிக்கு தங்கம் மற்றும் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்குதல் ஆகிய அதிமுக அரசின் திட்டங்களை ரத்து செய்ததை அடுத்து இந்த போராட்டம் நடைபெற்றது. அனுமதி பெறாமல் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. அதனால் முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சீவி சண்முகத்தை உடன் கலந்து கொண்ட மற்ற அதிமுக உறுப்பினர்களையும் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.