அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தலைமறைவு? அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

Photo of author

By Sakthi

நாடோடிகள் திரைப்படத்தில் நடித்த துணை நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்துவிட்டு தற்சமயம் திருமணம் செய்ய மறுப்பதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடித்த நாடோடிகள் திரைப்படத்தின் பணக்கார வீட்டு காதலர்களாக நடித்து இருந்த துணை நடிகை சாந்தினி பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார். சில காலங்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் அவர் திடீரென்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வந்து புகார் ஒன்றை கொடுத்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

அவர் கொடுத்த இருக்கின்ற புகாரில் தெரிவித்திருப்பதாவது, முன்னாள் அமைச்சரான மணிகண்டன் ஐந்து வருடங்களாக திருமணம் செய்யாமல் தன்னுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்துவிட்டு தற்சமயம் திருமணம் தொடர்பாக பேச்சு எடுத்தால் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுப்பதாகவும் தன்னுடைய ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலை தளங்களில் பதிவேற்றி விடுவேன் என்றும் மிரட்டல் விடுப்பதாக அவர் அந்த புகாரில் குறிப்பிட்டு இருக்கின்றார். ஆகவே இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் திமுகவின் முன்னாள் அமைச்சர் மருத்துவர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது .

இந்த சூழ்நிலையில், நடிகை சாந்தினி கொடுத்த புகாரில் கைது செய்யப்படுவது உறுதி என்று தெரியவந்ததால் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.