தமிழக அரசியலில் பரபரப்பு! திமுக அரசை பாராட்டிய அதிமுகவின் முக்கிய பிரபலம்

தமிழக அரசியலில் பரபரப்பு! திமுக அரசை பாராட்டிய அதிமுகவின் முக்கிய பிரபலம்

கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறைக்கப்பட்டு மீண்டும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கு,திரையரங்குகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் சாலையில் வசிக்கும் பொது மக்கள் உணவின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு தமிழகத்தில் உணவில்லாமல் தவிக்கும் இவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பல தன்னார்வலர்கள் உதவினர்.

அந்த வகையில் மதுரை ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில்அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு உணவு வழங்கினார்.

தமிழக அரசியலில் பரபரப்பு! திமுக அரசை பாராட்டிய அதிமுகவின் முக்கிய பிரபலம்

அப்போது பேசிய அவர்,இந்த முழு ஊரடங்கு சமயத்தில் ஏழை, எளியவர்களின் நலன் கருதி அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அம்மா உணவகம் தங்கு தடையின்றி செயல்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதைத் தமிழ்நாடே வரவேற்கிறது. நாங்களும் வரவேற்கிறோம். இதற்காக அவருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.

வழக்கமாக புதியதாக ஆட்சிக்கும் வருபவர்கள் ஏற்கனவே செயல்படுத்திய திட்டங்களை கிடப்பில் போடுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக நடந்து வருகிறது.அந்த வகையில் அம்மா உணவகம் செயல்படுமா என்ற அச்சமும் பொது மக்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் சமீபத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திமுகவின் அமைச்சர் துரைமுருகன் அப்படி அம்மா உணவகத்தை மூடினால் தான் என்ன? என்று சூசகமாக பதிலளித்திருந்தார். இதனையடுத்து அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் எழுந்தது.இதற்கு விளக்கமளிக்கும் வகையில் தமிழக முதல்வர் அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்த உறுதியளித்தார்.

இதற்காக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதரவு தெரிவித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக இவ்வாறு சில செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்து விட்டு பின்னர் கட்சி மாறியதும் தமிழக அரசியலில் நடந்தேறியுள்ளது.அந்த வகையில் இதுவும் அதற்கான அறிகுறியா என்றும் இரு கட்சியினர் தரப்பிலும் சந்தேகம் கிளம்பியுள்ளது.

Leave a Comment